பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

323

ஆண்டு நவம்பர் திங்கள் 1-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். அப்படி விடுதலை செய்யப்பட்டவர் போராட்டத்தைக் கைவிடுமாறு 25-10-1979-ல் வேண்டுகோள் விடுத்தார்.' அது மாத்திரமல்ல. 'தனித்தனியாக 3 சங்கங்களை அமைப்பதற்காக அரசு வெளியிட்ட வழிகாட்டிக் குறிப்புகளை அவர் ஆதரிப்ப தாகவும் கூறினார். தனித்தனியாக 3 சங்கங்கள் இருப்பதை நயினார்தாஸ் என்கிற அந்தப்போராட்டக் குழுவினுடைய தலைவர்களிலே ஒருவர் ஆதரிப்பதாக அறிவித்தார் என்றும் ஆய்வுரை கூறுகிறது. மாநிலத்திலே நடைபெற்ற இந்தக் கிளர்ச்சியில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் அதிகாரிகளும் ஆதரவளிக்கவில்லை. கிளர்ச்சிக்கு விரோதமாக இருந்தார்கள் என்றும் இந்தக் குறிப்பு கூறுகிறது.

அதுமாத்திரமல்ல. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ தோழர்களோ தருகின்ற தத்துவத்திற்கு எதிராக, ஏன் தொழிலாளர் களுக்காக உண்மையிலே பாடுபடுகின்றவர்கள் தருகின்ற தத்துவத்திற்கு எதிராக, இந்த ஆய்வுரையிலே தரப்பட்டிருக்கிறது 'கிளர்ச்சியில் கலந்துகொள்ளாமல் தங்கள் பணியைச் செய்துவந்த உண்மை ஊழியர்களான காவலர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 50 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் 'அட்வான்ஸ் இன்கிரி மென்டும் அவர்களுக்குத் தரப்பட்டது' என்னும் இந்த ஆய்வுரை யிலே கூறப்பட்டிருக்கிறது. ஆக இந்தக் கிளர்ச்சி எப்படிப்பட்ட முறையிலே முடித்து வைக்கப்பட்டது என்பதை ஆய்வுரையி னுடைய கடைசி பக்கம் 94ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். 'பதவி வாரியாகச் சங்கம் இருக்க வேண்டுமா என்பதே கிளர்ச்சிக்கான முக்கிய காரணமாகும். காவல்துறையிலுள்ள அதிகாரிகளும் பெரும்பான்மையானவர்களும் தங்கள் பதவிக்குரிய பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து நற்பணி ஆற்றியதால் க்கிளர்ச்சி சிதறிய நீர்த்துளிகள் போல போல பிசுபிசுத்துப் போய்விட்டது' என்று முதலமைச்சர் கடைசி கடைசி பாராவை முடித்திருக்கிறார்.

கிளர்ச்சி சிதறிய நீர்த் துளிபோல் பிசுபிசுத்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். யார் எழுதினாரோ தெரியாது. சிறு நீர்த்துளிகள் காய்ந்து போகுமே தவிர சிதறாது. சிதறிய நீர்த்துளிகள் பிசுபிசுத்துப் போகாது. ஆனால் எழுதி இருக்கிறார்கள்.