பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

325

huone Their absence from duty on account of the disciplinary action taken against them shall be treated as extraordinary leave (leave with- out pay and allowance) but it will not constitute a break in service." அதாவது சர்வீஸ் பிரேக் இருக்காது என்று சொல்லிவிட்டு அதே நேரத்திலே அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த நாட்களை லீவு நாட்களாகக் கருதப்படும் என்று கூறிவிட்டு அந்த நாட்களை 'Without pay and allowances' அதாவது சம்பளமும் அலவன்சும் இல்லாத அளவிலேதான் அவர்கள் எடுத்துக்கொள்ளப்படு கிறார்கள் என்று கூறி அவர்கள் அவர்கள் மீதுள்ள தண்டனை தளர்த்தப்படாத சூழ்நிலையிலே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக பழி வாங்கப்படும் நிலை தொடருகிறது.

காவல்துறை கிளர்ச்சியிலே ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் அவருடைய பரிதாபகரமான சூழ்நிலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் இந்த அவைக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சுந்தரம் என்கின்ற ஒரு

இன்ஸ்பெக்டர். அவர் எம்.ஏ. படித்தவர். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்தக் காவல்துறை நடத்திய கிளர்ச்சியிலே தலைமை வகித்து அந்தக் கிளர்ச்சியை நடத்தினார். அவர் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமினிலே வெளிவரவேண்டும் என்று கோரப்பட்டபோது கண்டிஷன் பெயில் கொடுக்கப்பட்டது. அது என்ன தெரியுமா ? அவர் செக்கந்தராபாத்தில் இருக்கவேண்டும். அவர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. செக்கந்தராபாத்திலேதான் இருக்கவேண்டும் என்ற கண்டிஷனிலே அவருக்குப்பெயில் வழங்கப்படுகிறது. பிறகு 19-12-1979-லே கிளர்ச்சி முடிந்த பிறகு அந்தக் கண்டிஷன் பெயில் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்படுகிறார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்து சேருவதற்குள்ளாக மிகப் பரப்பரப்பான செய்த ஒயர்லெஸ் மூலம் எல்லா இடங்களுக்கும் பரப்பப்படுகிறது. அந்த சுந்தரம் என்கிற இன்ஸ்பெக்டர் எங்கே இருந்தாலும் கைது செய்யவேண்டும் என்ற உத்தரவு இடப்பட்டு அப்படி கைது செய்து ஒப்படைக்கிறவர் களுக்கு சிறந்த வெகுமானம் அரசாங்கத்தால் அளிக்கப்படும் என்று சுந்தரத்தின்மீது பழிவாங்கப்படுகிற கணை மிக வேகமாகப் பாய்கிறது