பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

காவல்துறை பற்றி

களை

முதலில் ட்ரெயினிங்கிற்காக செலக்ட் செய்யப்படுகிறார்களே அவர்கள் எல்லாம் சென்னையில் உள்ள பயிற்சிப் பள்ளிக்குத்தான் அனுப்பப்படவேண்டும். ஆனால், மதுரை மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள், மதுரை மண்டலத்தில் ஒரு டெபுடி டைரக்டர் ஆப் பயர் சர்வீஸ் திரு. ஜெயபெருமாள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்றால், வருகிற ஆட்க தேர்வு செய்கிறார். அதாவது தகுதி அற்றவர்களை, அன்-குவாலிபைடாக இருந்தாலும்கூட - இத்தனை அடி உயரம் இருக்கவேண்டும் என்றால் ஒரு அங்குலம் குறைந்தால் கவலையில்லை. ஒரு அங்குலம் குறைந்தால் அந்த ஒரு அங்குலத்திற்கு ரூபாய் நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டால், அந்த ஒரு அங்குலக்குறைவு ஒதுக்கிவைக்கப்படுகிறது, இப்படி ஏறத்தாழ 300 பேர் அவர் செலக்ட் செய்து இருக்கிறார். அந்த 300 பேரில் பெரும்பாலும் தகுதி அற்றவர்கள்தான். அன்குவாலிபைட் தான் செலக்ட் செய்து இருப்பதால், அவர்களை செலக்ட் செய்து சென்னைக்கு அனுப்பவில்லை. இங்கேதான் பெரும் பயங்கரம் அடங்கி இருக்கிறது.

சென்னையில் உள்ள ட்ரெயினிங் சென்டருக்கு அவரால் பயர் மென் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்களை அனுப்பினால் இங்கே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். ஏனெனில் அவர்கள் தகுதி அற்றவர்கள். எனவே, அரசாங்கத்தின் சாங்ஷன் எதையும் பெறாமல் அரசாங்கத்தின் ஒப்புதல் பெறாமல், அவராகவே ஒரு ட்ரெயினிங் சென்டரை அங்கே நடத்துகிறார். இங்கு முதலமைச்சரின் கையெழுத்துப் போட்டு தந்து இருக்கிற அறிக்கையில் சென்னையில்தான் ஒரு பயிற்சி நிலையம் என்று போட்டு இருக்கிறீர்கள். ஆனால் அந்த டெபுடி டைரக்டர் ஆப் பயர் சர்வீஸஸ் ஜெயபாலன் அவர்கள் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அங்கே அனுப்பினால் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவே நாமே இங்கேயே ஒரு ட்ரெயினிங் சென்டர் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்லி, ஒரு ட்ரெயினிங் சென்டரை, கடந்த 6 மாதகாலமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்.

அப்படி நடத்திக்கொண்டிருக்கிற அந்த டிப்டி டைரக்டர் மீது கரப்ஷன் வழக்குகள் மாத்திரம் 12 இருக்கின்றன. அந்த