கலைஞரின் சட்டமன்ற உரைகள்
329
வழக்குகளைப்பற்றி ஃபைல்' -கோப்பு ஒன்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சரிடம் தேங்கிக்கிடக்கிறது என்று சொன்னால் ஒருவேளை கோபம் வரும்; இருப்பதாக நான் கேள்விப்பட்டேன் இப்படி 12 கரப்ஷன் சார்ஜஸ் அவர்மீது. அவர் ஒருமுறை சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார். சஸ்பென்ட் செய்யப்பட்டு, மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். நான் கேட்கிறேன். அவர் மீதுள்ள இந்த 12 சார்ஜஸும் என்ன ஆயிற்று ? அவரே அங்கே சர்க்கார் அனுமதி இல்லாமல் ஒரு ட்ரெயினிங் ஸ்கூல் வைத்து நடத்த அனுமதி கொடுத்தது யார் ? அப்படி நடத்த உரிமை உண்டா ? ஏறத்தாழ 300 பேர்களை அவராகவே செலக்ட் செய்து, சென்னையில் ஒரு ட்ரெயினிங் சென்டர் இருக்கும்போது அங்கே அனுப்பாமல் இங்கே ட்ரெயினிங் ஸ்கூல் நடத்தும் விசித்திரம் என்ன ? இப்படிப்பட்ட ஒரு ஊழல், தீ அணைப்புத் துறையில் நடைபெறுகிறது. இதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்பதுதான் என்னுடைய கேள்வியாகும்
அடுத்து, அமைச்சரவை மாநில, மாவட்ட நிர்வாகம் பற்றி ஒன்றிரண்டைக் கூற விரும்புகிறேன். மானியக் கோரிக்கை 9-ல் அமைச்சரவை செலவு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1975-76 ஆம் ஆண்டு 18.39 இலட்சம் ரூபாய்; இந்த அமைச்சரவை செலவு என்று கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. கணக்கு காட்டப்பட்டிருக்கிறது என்றால் 'ரிவைஸ்ட் எஸ்டிமேட்' வந்த பிறகு கொடுக்கப்பட்ட கணக்கு. அந்தக் கணக்கு 18.39 இலட்சம் ரூபாய். ஆனால் 1979-80-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒதுக்கப்பட்டது 16.22 இலட்சம் ரூபாய். பார்க்கும்போது ஆஹா! தி.மு.க. 18 இலட்சம் ரூபாயை எடுத்திருக்கிறது அமைச்சரவைச் செலவுக்காக. இந்த ஆட்சியில் 16 இலட்சம்தான் ஒதுக்கினார்கள் என்று திருப்திபடலாம். ஆனால் நிலைமை என்ன ? ரிவைஸ்ட் எஸ்டிமேட்டில் அந்த 16.22 இலட்சம் ரூபாய் 29.80 இலட்சம் என்று உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மடங்கு அதிகமாக உயர காரணம் என்ன ? என்ன காரணத்தால் அவ்வளவு உயர்ந்தது. 16 இலட்சம் அமைச்சரவை செலவுக்கு என்று ஒதுக்கியது 29 இலட்சம் என்று உயர்ந்த காரணம் என்ன ? சுற்றுப்பயணச் செலவு ? அல்லது டெலிபோன் செலவா ? அல்லது இந்த செலவுகளோடு தூதுவருடைய செலவு அடங்குமா ? அல்லது தூதுவருடைய செலவு தனியாகத் தரப்படுமா ! என்பது எல்லாம்
ா