பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

333

என்றால் இது முறைதானா ? இதுதான் நேர்மையான காரியமா என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து ஆளும் கட்சியினுடைய முன்னணித் தலைவர்களில் ஒருவர் பெரிய பதவியில் இருப்பவர் அவர். அவர்களுடைய மருமகன் மதுரை மாநகராட்சி மன்றத்திலே பணிபுரிகிறார். மதுரை மாநகராட்சி மன்றத்தில் 27-4-1980 அன்று ஒரு தீர்மானம் நிறைவேறுகின்றது. இதுபற்றி வந்த செய்திகளை எல்லாம் அறிந்து நமது முதலமைச்சரவர்கள்கூட மதுரையிலே கடிந்துகொண்டார் என்று கேள்விப்பட்டேன். அவர்களுடைய காதுக்கு இந்தச் செய்திகளையும் போட்டு வைக்கிறேன். 27-4-1980 அன்று ஒரு தீர்மானம் வருகின்றது. அந்தத் தீர்மானத்தின் எண் 69. அதனுடைய வாசகம் என்ன தெரியுமா ? அதன்படி அந்த மாநகராட்சியிலே பணிபுரிகின்றவர் அர்பன் இன்ஜினீயரிங் கோர்ஸ் என்ற ஒரு படிப்பை இரண்டாண்டுகள் படிக்க செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு அவருடைய படிப்புக் காலம் முழுவதையும் பணிக்காலமாகக் கருதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் மேல்படிப்புக்காக கல்லூரிக்கு செலுத்தவேண்டிய நுழைவுப்படி தேர்வு மற்றும் சிறப்புக் கட்டணங்களை மாநகராட்சியே செலுத்த வேண்டும் என்றும் விடுதிச் செலவு அன்னார் படிப்புக்குப் போய் வரும் பிரயாணக் கட்டணம், பிரயாணப்படி போன்றவைகளையும் மாநகராட்சியே செலுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதற்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் செலவாகக்கூடும். எதற்காக இந்த சலுகை கொடுக்கப்படுகின்றது ?

இப்படி ஒரு சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சி யிலே மருமகன் பணியாற்றுகிறார். அந்த மருமகனுக்கு படிப்புக்கு ஆகும் செலவு, பிரயாணச் செலவு, விடுதிச் செலவு போன்ற அத்தனைச் செலவுகளையும் கிட்டத்தட்ட 50,000 ரூபாய் அளவிற்கு மாநகராட்சி மன்றமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை மாநகராட்சி மன்றமே போட்டு அதை நிறைவேற்றுகிற ஒரு சூழ்நிலை இருக்கிறது.

அடுத்து இதே மதுரையிலே அண்ணா நகர் என்ற ஒரு டம் இருக்கிறது. இதை முதலமைச்சர் அவர்கள் கவனிக்க

இடம்