பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

339

இரண்டாவதாக ஒன்றைச் சொன்னார்கள். ஆளுநர் ஆட்சியிலே 39 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்திற்கு நாங்கள் வழி செய்தோம் என்றும் குறிப்பிட்டார். நான் ஆளுநர் ஆட்சியைக் குறை சொல்லவில்லை. அன்றைக்குக்கூட நான் பேசும்போது, 'அவர் ஒரு கல்லை எடுத்தார்’ என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், அதற்காக 39 கோடி ரூபாய்க்குக் கூடுதல் வருமானத்திற்காக வழி செய்தார் என்று காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சொன்னது ஒரு தவறான புள்ளி விவரமாகும்.

மூன்றாவதாக இன்னொன்றையும் சொன்னார், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஐ. எம். எஃப். எஸ்.-னுடைய விற்பனை குறைவாக இருக்கும்போது, தமிழ் நாட்டிலே மாத்திரம் ஏன் அதிகம் இருக்கிறது என்று தெரியவில்லையென்றும் கேட்டார். அதற்கெல்லாம் விளக்கம் அளிக்கப் பின்னால் வருகிறேன். இருந்தாலும், ஆளுநர் ஆட்சியின்போது மதுபான உற்பத்தியாளர்களிடம் வாங்கும் விலையைக் குறைத்துத் தரும்படி அந்த அரசு கேட்டது. அதாவது அரசாங்கத்தினுடைய நிறுவனமாக இருக்கின்ற 'டாஸ்மாக்' உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கும் விலையைச் சற்றுக் குறைத்துத் தர வேண்டுமென்று கவர்னர் ஆட்சியிலே கேட்கப்பட்டது. ஆனால் முதலிலே அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு அவர்களிடம் வாங்காமல் அகில இந்திய அடிப்படையில் டெண்டர் முறையில் வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, ஆளுநர் ஆட்சியிலே டெண்டர் பெறப்பட்டது. அப்படி பெறப்பட்ட டெண்டர்களை பரிசீலனை செய்து கொண்டிருக்கும்போது, மதுக் கடைக்காரர்கள் உயர்நீதிமன்றத்தில், வெளி மாநிலத்திலிருந்து வாங்கக் கூடாது என்று வழக்குப் போட்டார்கள்; 'ஸ்டே' கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். உயர்நீதிமன்றம் தடை வழங்காவிட்டாலும், அந்த டெண்டர்களைப் பரிசீலிக்கலாமே தவிர, அதன் மீது முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. இதற்கிடையில் கவர்னர் ஆட்சியில் அதிகாரிகளும், மதுபான உற்பத்தியாளர் களும் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். அப்போது உற்பத்தியாளர்கள் தாங்களாகவே விலையைக் குறைத்துக் கொள்வதாகச் சொன்னார்கள். அப்படி ஒரு கேசுக்கு குறைத்துக் கொள்வதாக ஒப்புக்கொண்டது 30 ரூபாய் ஆகும். அக்டோபர் முதல் ஜனவரி முடிய இப்படி 31 ரூபாய் ஒரு கேசுக்கு குறைத்துக்