340
காவல்துறை பற்றி
கொள்ளப்பட்டு, குறைக்கப்பட்ட மொத்த கேசுகள் 19 இலட்சம் கேஸ்களாகும்.
கடந்த ஆண்டு மொத்தத்திலே விற்கப்பட்ட 47 லட்சம் கேசுகளில் உள்ளடங்கியதுதான் இந்த 19 லட்சம் கேசுகள் என்பதையும் நான் நினைவூட்டுகிறேன். இதனால் 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு 5.7 கோடி ரூபாய்தான் கிடைத்தது. அதுபோலவே அந்த நிறுவனத்திற்கு பீர் வியாபாரம் மூலம் 28 லட்சம் ரூபாய் கிடைத்தது. இரண்டும் சேர்ந்து சுமார் 6 கோடி ரூபாய்க்கு மேல் லாபமாகக் கிடைத்ததேயல்லாமல், நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திரு. பீட்டர் ஆல்போன்ஸ் சொன்னதைப்போல 30 கோடி அல்ல என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
-
இன்னொன்றையும் அவர் கேட்டார். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவை விட தமிழகத்திலே மாத்திரம் இந்த ஐ. எம். எஃப். எஸ். அதிகமாக விற்பதற்கு என்ன காரணம் என்பதையும் கேட்டார். அதற்கான காரணத்தை நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். 1986-87ஆம் ஆண்டு வரையில் இந்த மது விலக்கினால் ஆயத் தீர்வை 286 கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக வந்தது. அந்த 286 கோடி ரூபாயிலே சாராயக் கடைகள் மூலமாக வந்தது 202 கோடி ரூபாய்; கள்ளுக்கடை மூலமாக வந்தது 17 கோடி ரூபாய்; ஐ. எம். எஃப். எஸ். மூலமாக வந்தது 56 கோடி ரூபாய்தான். பீர் மூலம் 5 கோடி ரூபாய்; இதர வருவாய் 6 கோடி ரூபாய். இப்படி மொத்தம் 286 கோடி ரூபாய் 1986-87 வரையில் வந்தது.
பிறகு 31-12-1986-ல் சாராயக் கடைகளும், கள்ளுக் கடைகளும் மூடப்பட்டு விட்டன. அவை மூடப்பட்டு விட்ட காரணத்தால் அடுத்த ஆண்டு 1987-88-ல் அரசாங்கத்தினுடைய மொத்த வருவாய் 120 கோடி என்று ஆகிவிட்டது. அந்த ரூபாய் 120 கோடியிலே ஏற்கெனவே 56 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த ஐ. எம். எஃப். எஸ். 105 கோடி ரூபாய் வருமானம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. எனவேதான் திரு. பீட்டர் ஆல்போன்ஸ் அவர்களுடைய ஆச்சரியமான சந்தேகத்திற்குத் தருகின்ற விளக்கம், சாராயக் கடைகளும், கள்ளுக் கடைகளும் தமிழ்நாட்டிலே மூடப்பட்டு விட்ட காரணத்தாலேதான்