கலைஞரின் சட்டமன்ற உரைகள்
ஆந்திராவைவிட, கர்நாடகத்தைவிட, கர்நாடகத்தைவிட,
341
கேரளாவைவிட
ஐ. எம். எஃப். எஸ்.-னுடைய வியாபாரம் இங்கே அதிகமாயிற்று என்ற விளக்கத்தை நான் தர விரும்புகிறேன்.
120 கோடி ரூபாயிலே ஐ. எம். எப். எஸ். மூலம் 105 கோடி ரூபாய்; பீர் மூலம் 3 கோடி ரூபாய்; ஹை குவாலிடி வெளி மாநில மதுவின் மூலம் 12 கோடி ரூபாய்; மொத்தம் 120 கோடி ரூபாய் 1987-88-ல். 1988-89-லும் அதே சுமார் 120 கோடி ரூபாய்தான் வருமானம். ஐ. எம். எஃப். எஸ். மூலமாக 112 கோடி; பீர் மூலமாக 6 கோடி; இதர வருவாய் 2 கோடி. எனவே மொத்தம் சுமார் 120 கோடி மதுவிலக்குத் துறையின் மூலமாக கடந்த ஆண்டு அரசுக்குக் கிடைத்த வருவாய்.
6
நான் இப்போது இந்த ஆண்டு கிடைக்கக்கூடிய வருவாய்க்கான ஆதாரப் புள்ளி விவரங்களை உங்கள் முன்னால் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு 47 இலட்சம் கேஸ்கள் விற்பனையாகி இருக்கின்றன. அதற்கு முதல் ஆண்டு 36 இலட்சம் கேஸ்கள். அது 47 இலட்சமாகப் பெருகி இருக்கிற காரணத்தால் இந்த ஆண்டு சுமாராக நாம் கணக்கிடுவது 50 இலட்சம் கேஸ்களாவது விற்கும் என்ற அடிப்படையிலே கணக்குப் போட்டுப் பார்த்தால் 50 இலட்சம் கேஸ்களுக்கு ‘ப்ரூப் லிட்டருக்கு' 55 ரூபாய் வீதம் - எக்சைஸ் வரியை நாம் 25 முதல் 55 என்று உயர்த்தியிருக்கிறோமே அதன் மூலம் கிடைக்கிற எக்ஸ்சஸ் வரி 185.62 கோடி ரூபாய். இதற்கு 20 சதவீதம் விற்பனை வரி. அதன் மூலம் கிடைக்கக்கூடிய 37.12 கோடி ரூபாய். இதன்மீது 10 சதவீதம் சர்சார்ஜ் 3.71 கோடி ரூபாய்.
பல்க் லிட்டர் ஒன்றுக்கு வென்ட் ஃபீ 4 ரூபாய் வீதம் மொத்தம் 18 கோடி ரூபாய். எக்சைஸ் வரி, அதாவது கடந்த கால ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக, எடுக்கப்பட்டு விட்டதாகச் சொன்னோமே, அந்த எக்சைஸ் வரியை மீண்டும் போட இருக்கிற காரணத்தால் எக்சைஸ் வரி, வென்ட் ஃபீ இவற்றின் மூலம் 31.50 கோடி ரூபாய், ஏலக்கடைகள் மூலம் எதிர்பார்க்கக் கூடிய வரவு முன்பு 4 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 20 கோடி ரூபாய் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீர் மீது போடப் பட்ட எக்சைஸ் வரி, வென்ட் பீ மூலமாக எதிர்பார்க்கப்படுகிற வரவு 20 கோடி ரூபாய். பீர் மீது எதிர்பார்க்கக்கூடிய அதிக வருவாய் 5 கோடி. ஆக மொத்த வருமானமாக இந்த ஆண்டு