பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

காவல்துறை பற்றி

சுமார் 300 கோடி ரூபாய்க்குமேல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த மொத்த வருவாய் 300 கோடியில் கடந்த ஆண்டு கிடைத்த சுமார் 120 கோடியைக் கழித்து விட்டால் டுதல் வருவாய் 180 கோடி ரூபாயாகும். சில்லறையில் பழைய விலைக்கே இப்போது விற்கப்படுவதால் கடந்த ஆண்டு கிடைத்த தைப் போல டாஸ்மாக்'குக்கு 45 கோடி ரூபாய் கிடைக்காது. அது குறையும். எனவே, மொத்தமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிற 300 கோடி ரூபாயில் கடந்த ஆண்டு கிடைத்த 120 கோடி ரூபாயையும் டாஸ்மாக் மூலம் கிடைத்த 45 கோடி ரூபாயையும் கூடக் கழித்து விட்டுப் பார்த்தாலும் கூட அதிகமாக 135 கோடி ரூபாய் இந்த அரசுக்கு இந்த ஆண்டு வருவாய் கிடைக்க வழி இருக்கிறது. மொத்தமாக நான் சொன்ன 255 கோடி ரூபாயிலே கூட ஏதாவது சற்று இலாபம், அதாவது வருவாய் குறையுமானால் நிச்சயமாக 240 கோடி ரூபாய் அதாவது 135 கோடி ரூபாய் அதிகமாகக் கிடைக்கும். இப்படிக் கூடுதலாகக் கிடைக்கும் 130 கோடி ரூபாய் அல்லது 135 கோடி ரூபாயுடன் மேலும் வருவாயைப் பெருக்கவும் முடியும். அது எப்படி என்றால் நான் இதைச் சொல்லும்போது நீங்கள் சில்லறை விற்பனைக் கடைகளில் விலையை அதிகப்படுத்தித்தான் இலாபத்தைப் பெருக்கப் போகிறீர்கள் என்று தவறாகக் கருதிக் கொள்ளக் கூடாது. அந்த விலையை அதிகப்படுத்தாமலேயே 130 கோடி ரூபாய் அதிகமாக இந்த ஆண்டு இந்த அரசுக்குக் கிடைக்கும் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.

சில்லறைக் கடைகளில் இப்போது விற்கின்ற விலையைப் பார்த்தால் தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கர்நாடகாவில் 750 எம். எல். கொண்ட நெம்பர் ஒன் விஸ்கி ஒரு பாட்டில் 117 ரூபாய். ஆந்திராவில் 120 ரூபாய். கேரளாவில் 125 ரூபாய். தமிழ்நாட்டில் மாத்திரம் 87 ரூபாய்.

அதைப்போல நெம்பர் ஒன் பிராந்தி 750 எம். எல். கொண்ட பாட்டில் கேரளாவில் 93 ரூபாய்; ஆந்திராவில் 100 ரூபாய்; கர்நாடகாவில் 117 ரூபாய்; தமிழ்நாட்டில் 69 ரூபாய்தான்.

'பேக் பைப்பர் விஸ்கி' என்று எடுத்துக் கொண்டால் கேரளாவில் 103 ரூபாய்; ஆந்திராவில் 100 ரூபாய்; கர்நாடகாவில் 98 ரூபாய்; தமிழ்நாட்டிலே 76 ரூபாய்தான்.