பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

347

தான் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிலே 100 ரூபாய் மிச்சப்படுகிறது. பெட்டிகள் 6.54 காசு கேட்டார்கள். அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. வெண்ட் ஃபீ 18 ரூபாய். அது ஏற்கப் பட்டிருக்கிறது. மொத்த வேரியபிள் காஸ்ட் 302 ரூபாய் என்று சொன்னால், அது 172 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. நிர்ணய விலை மற்றும் லாபம் 47 ரூபாய் 83 காசு என்று கேட்டார்கள். அந்த நிர்ணய விலையும் லாபமும் 47.83-க்கு சம்மதிக்க இயலாது என்று கூறி 25.78 என்கின்ற அளவுக்குக் குறைக்கப்பட்டு, முன்பு 350 ரூபாயாக கேஸ்-க்கு இருந்த விலை இப்போது 198 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோலவே, நான் சொன்னது, ஜானக் ஷா பிராந்தி 750 எம்.எல். அதனுடைய ஒரு கேஸ்-னுடைய விலை விவரம். பாலாஜி டிஸ்ட்டில்லர்ஸ். மெக்டோவல் விஸ்கி 750 எம். எல். அது ஒரு கேஸ்க்கு விலை ஏற்கெனவே 398 ரூபாயாக இருந்தது. நான் சொன்னது போல, ஒவ்வொரு ஐட்டமும் குறைக்கப்பட்டு இப்போது 248 ரூபாய் என்கின்ற அளவுக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இப்போதுதான் முதன் முதலாக அவர்களுடைய உற்பத்திச் செலவுக் கணக்கை அரசுக்குக் காட்டியிருக்கிறார்கள் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 7 ஆண்டுக்காலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 300 கோடியிலிருந்து 500 கோடி ரூபாய் வரை அவர்கள் மதுபானம் தயாரித்து அரசுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அடிப்படை விலை நிர்ணயிக்கப் படாமலேயே, உற்பத்திச் செலவுக் கணக்கு என்ன என்பதை அரசாங்கத்திற்குச் சொல்லாமலேயே இருந்த நிலையை மாற்றி உற்பத்திச் செலவு என்பதை முதன் முதலாக அவர்களைக் கேட்டு அவர்கள் வாயிலாகவே விவரங்களைத் தெரிந்துகொண்டு இப்போது அவர்கள் தயாரித்த பொருட்களுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்திருப்பது இந்த அரசின் பெரிய சாதனை என்பதை நான் இங்கே பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி.)

இதை நான் இந்த மன்றத்திலே முன்பு சொன்னபோது கூட யாரையும் குறை சொல்ல வேண்டும், யாரையும் பழி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை. அரசுக்குக்