பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

காவல்துறை பற்றி

முடியாத நம்பிக்கை இருந்து தீரவேண்டும். ஆனால் போலீசார் அவர்கள் கடமையை ஆற்றவொட்டாமல் ஒழுங்குமுறைகளை மீறி, சட்டத்தை மீறி ஏதோ எதிர்க்கட்சியில் இருக்கிற சிறப்பாக, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர்தான் போலீஸாரை தங்கள் பணிகளை செய்ய விடாமல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சி உறுப்பினர்களால் பரவலாக எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் அவர்களுக்கு நான் ஒன்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். போலீஸ் இலாகா தனது நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டது. போலீஸ் மீதிருந்த பயம் எந்தளவிற்கு மக்கள் மத்தியில் யாரால் நீக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தோ, அறியாமலோ இந்தப் புத்தகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படியானால் போலீஸார் என்றால் ஒரு பயங்கரமான உணர்ச்சி ஏற்பட வேண்டுமா என்று கேட்டால் நாங்கள் இப்படிக்கூறவில்லை, அப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படத் தேவை இல்லை. முதலமைச்சர் அவர்கள் இங்கு ஒருநாள் குறிப்பிட்டார்கள், தாயிடம் பிள்ளைக்கு இருக்கும் பயத்தைப் போன்று போலீஸாரிடம் மக்களுக்கு இருக்கவேண்டுமென்று.

னால் அது நீண்ட நெடு நாட்களாகவே போக்கப்பட்டு விட்டது. அதற்கு இந்த நாட்டில் இருக்கிற காங்கிரஸ் தலைவர்ளும், காங்கிரஸ்காரர்களும்தான் காரணம் என்று நான் குற்றம் சாட்டுவேன். இந்த நூற்றாண்டு விழா மலரில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள், "வெள்ளையனே வெளியேறு" என்ற போராட்டத்தில், சுதந்திரப் போராட்டத்தில் பல வெறிச் செயல்களைத் தூண்டிவிட்டு போலீஸ்காரர்கள் எங்கெங்கே தாக்கப்பட்டார்கள் என்ற இந்த விவரங்கள் அத்தனையும் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குமாரபாயைத்தில் கள்ளுக்கடை மறியல் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்டது. நாங்களும் இந்தி எதிர்ப்பு போராட்டம், மறியல் நடத்துகிறோம். இந்த மறியல்கள் எந்தளவிற்கு அமைதியாக கடந்த 4, 5 மாதங்களாக சென்னையிலும் சரி, மதுரையிலும் சரி, நெல்லையிலும் ஆகட்டும், எந்தளவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறியல் போலீஸாருக்கு குந்தகம் விளைவிக்காத அளவில் அமைதியாக நடைபெறுகிறது என்பதை நன்றாக அறிவீர்கள். அப்படி அறிகிற காரணத்தினால்தான், அமைச்சர்