354
-
—
-
காவல்துறை பற்றி
தேவையடா” என்று நான் அப்போதே காவல் துறையினருக்காகக் குரல் கொடுத்தவன். நான் என்றால் - குரல் கொடுத்த கட்சி கழகம் அண்ணாவின் தம்பிமார்கள் திருநாவுக்கரசு உட்பட! அது தடை செய்யப்பட்டது. காவல்துறைக்காக வாதாடுகிறேன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அது தடை செய்யப்பட்டது. அந்த நாடகத்தில் வேறு தவறான காட்சிகள் என்ன என்று கேட்ட போது போலீஸ்காரர் அலுத்துப்போய் வீட்டிற்கு இரவு 12 மணிக்கு வந்து சேருவார். என்ன இருக்கிறது என்று மனைவியைப் பார்த்துக் கேட்பார். ஏதோ பழைய சோறு இருக்கிறது என்று மனைவி சொல்லுவாள். தொட்டுக் கொள்ள ஒன்றுமில்லையா என்று இவன் கேட்பான். நான் இருக்கிறேன் தொட்டுக்கொள் என்று கூறுவாள் மனைவி. அதைச் சாப்பிட்டு விட்டு படுக்கப்போவார் அந்தப் போலீஸ்காரர். அப்போது கதவு தட்டப்படும். என்ன என்று கேட்பார். “மந்திரி வருகிறார், காவலுக்கு வா” என்று வந்தவர் சொல்லுவார். இப்போதுதான் வந்தேன். அதற்குள் மந்திரி வருகிறானா என்று திட்டிக்கொண்டே அவர் போவார். அதற்காக அந்த நாடகம் தடை செய்யப்பட்டது. அப்படி நாடகம் எழுதி காவல்துறை நண்பருடைய கதாபாத்திரத்தை அவருடைய கஷ்டங்களைப் படைத்தது மாத்திரமல்ல நான் பொறுப்புக்கு வந்த உடனே அன்றைக்கு எழுதியதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அதுவரை அவர்கள் பேசிக் பே ரூ. 80 வாங்கிக் கொண்டிருந்ததை முதல் தடவையாக ரூ.230 ஆக அன்றைக்கு அதிகப்படுத்திக் கொடுத்தது தி. மு. க. ஆட்சி. இன்றைக்கு ரூ. 500, ரூ. 600 என்று வளர்ந்திருக்கலாம். ஆனால் ரூ. ரூ.80 80 ஆக இருந்தது ஒரே பாய்ச்சலில் ரூ. 230 ஆக ஆக்கப்பட்டது தி. மு. க. ஆட்சியில்தான்
-
-
அதுமாத்திரமல்ல, திரு. கோபாலசாமி ஐயங்கார், ஐ. சி. எஸ். அவருடைய தலைமையில் 1971 ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் ஒரு போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, சிலம்புச் செல்வர் ம. பொ. சி. போன்றவர்களெல்லாம் அந்தக் குழுவில் இடம் பெற்று - அவர்கள் போலீசாருடைய சம்பள உயர்வைப் பற்றி மாத்திரமல்லாமல் இங்கே திரு. பாண்டியன் அவர்கள் எடுத்துக் காட்டியதைப்போல் எப்படி இந்தத் துறை நவீன மயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும், இந்தத் துறை மேலும் நல்லமுறையில் பணியாற்ற, மக்களுடன் தொடர்பு கொள்ள