362
காவல்துறை பற்றி
தஞ்சை கிழக்கு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது நாகப்பட்டினத்தில் வாடகைக் கட்டடத்தில் உள்ளது. நேற்றைக்கு மாண்புமிகு உறுப்பினர் இராசேந்திரன் அவர்கள் பேசுகிறபோது எஸ். பி. யே அங்கே இல்லை என்றார். எஸ். பி. பதவிக்காக அங்கே ஒருவர் நியமிக்கப்பட்டு அவருடைய துணைவியார் உடல் நலமின்றி இருக்கிற காரணத் தால் சில நாட்கள் லீவில் இருக்கிறார். விரைவில் அங்கே வந்து பொறுப்பேற்க இருக்கிறார். அந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது நாகப்பட்டினத்தில் வாடகைக் கட்டடத்தில் உள்ளது. இந்த கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட ஆகும் செலவு 53 லட்சம் ரூபாய் என்று 1987-ல் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இப்போதுள்ள விலை விகிதப்படி 68 லட்சம் ரூபாய் ஆகுமென்று கணக்கிடப் பட்டுள்ளது. இந்த ஆண்டிலே, இதை கட்டி முடிக்க நிதியாதாரம் இல்லை என்றாலும், இதை எங்கே கட்டுவது என்ற பிரச்சினை எழுந்த போது, நாகப்பட்டினம் என்றால் அந்தப் பகுதியில் ஒரு ஒரத்திற்கு அது போய்விடுகிறது. எனவே நடுப்பகுதியாக இருக்கிற திருவாரூரில் கட்டலாமா என்கிற ஒரு யோசனை இருக்கிறது. எனவே நாகையா, திருவாரூரா என்பது விரைவிலே முடிவு எடுத்து அறிவிக்கப்படும். ஆகவே இரண்டு ஊரிலே ஊரிலே ஒரு ஊரில் நிச்சயமாக கட்டப்படும்.
அடுத்தது, மிக முக்கியமான பல்லாண்டுகால கோரிக்கை, தங்களுடைய கோரிக்கைகளுக்காக திரு. ரமணி அவர்கள்கூட சான்னார்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராட்டத்திலே ஈடுபட்ட போலீஸ்காரர்கள், அதிகாரிகள் கடந்த கால ஆட்சியிலே நடவடிக்கைக்கு உள்ளானார்கள். இதன்காரண மாக வழக்கு மன்றத்திற்கும் சென்று இருக்கிறார்கள். கடந்த கால அரசு அவர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). எனவே அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற்று, பணிகளிலே சேரலாம் என்று அழைப்பு விடுக்கிறேன்.
இன்னொன்று இந்த ஒலி பெருக்கி, பெட்டி ஒலிபெருக்கி தான் வைக்கவேண்டும் என்று ஒலி பெருக்கிச் சங்கத்தார் பலருக்கு பல தொல்லைகளைத் தருகிற அளவிலே சட்டம்
—