பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

365

ஒரு ஜீப்பின் விலை 1 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய். 13 காவல் கோட்டங்களுக்கு ஜீப் வழங்க மொத்தச் செலவு 18 லட்சம் ரூபாய். இதுவரையில் ஜீப் வழங்கப்படாத காவல் கோட்டங்கள் வேலூர், சேலம் புறநகர், ஈரோடு டவுன், ஊட்டி, நாகபட்டினம், திருச்சி, கோவை ஊரகம், இருப்புப்பாதைக் காவல், திருச்சி, அடையாறு, மைலாப்பூர், தியாகராய நகர், அண்ணா நகர், டிராபிக் இன்வெஸ்டி கேஷன், சென்னை, இவற்றில் சென்யிைலே உள்ள அடையாறு, மைலாப்பூர், தியாகராய நகர், அண்ணா நகர், டிராபிக் இன்வெஸ்டி கேஷன் ஆகிய 5 இடங்கள் தவிர, மற்ற இடங்களுக்கு இந்த ஆண்டே ஒரு கோட்டத்திற்கு ஒரு ஜீப் வீதம் வழங்க முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலே இளநிலை உதவியாளராகவோ, அலுவலக உதவியாளராகவோ நியமனம் செய்யலாம் என்ற அரசு ஆணை 15-2-1972-ல் கழக ஆட்சியில் வெளியிடப்பட்டது.

ஆனால் காவல்துறையில் போதுமான இளநிலை உதவி யாளர்கள் அல்லது அலுவலக உதவியாளர்கள் பணி இடங்கள் காலி இல்லாததால் கிட்டத்தட்ட 200 பேர் கருணையின் அடிப்படையில் வேலைபெறக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். இப்போது இருக்கக்கூடிய அரசு ஆணையின்படி கல்வித் தகுதி மற்ற உடல் தகுதி பெற்றிருந்தால்கூட, அவர் களைக் காவலர் பணிக்கோ அல்லது உதவி ஆய்வாளர் பணிக்கோ அமர்த்த இயலாத நிலை உள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, கல்வித் தகுதி மற்றும் உடல் தகுதி உள்ளோருக்கு காவல்துறையில் அவர்களுடைய தகுதிக்கேற்ப காவலர்களாகவோ அல்லது உதவி ஆய்வாளர்களாகவோ, கருணை அடிப்படையில் பணியில் நியமிக்கலாம் என்று இந்த அரசு ஆணை வழங்க இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் துறையினருடைய உணவுப்படி மற்றும் மற்ற சம்பளங்கள் குறித்தும் திரு. ரமணி அவர்கள் நேற்றையதினம் இங்கே விரிவாகப் பேசினார்கள். விரைவிலே வர இருக்கின்ற