பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

காவல்துறை பற்றி

ஊதியக் குழுவினுடைய பரிந்துரைக்குப் பிறகு இதுபற்றி யோசிக்கப்படும் என்று நான் அவர்களுக்கு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னரசு அவர்கள் பேசும்போது தமிழ்நாடு சிறப்புக் காவல் அணி ஒன்றை உளுந்தூர்பேட்டையில் வைக்கவேண்டு மென்று கேட்டுக்கொண்டார்கள். இப்போது இப்படிப்பட்ட சிறப்புக் காவல் அணி தமிழகத்திலே 9 இடங்களிலே அமைக்கப் பட உள்ளது. அதிலே ஒரு சிறப்புக் காவல் அணியை உளுந்தூர் பேட்டையில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்

இராமநாதபுரம் டி. ஐ. ஜி. அலுவலகத்தை மாவட்டத்தின் மத்தியப் பகுதிக்கு மாற்றவேண்டுமென்று தென்னரச அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதை விருதுநகரில் அமைக்கவேண்டு மென்று நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. பெ. சீனி வாசன் மற்றும் திரு. சொக்கர் அவர்களும் கேட்டுக்கொண் டார்கள். மெஜாரிட்டியாக அவர்கள் இருக்கின்ற காரணத்தால் விருதுநகரில் டி. ஐ. ஜி. அலுவலகம் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து வரதட்சிணை தடைச் சட்டத்தைப் பற்றி நேற்றைய தினம் திரு. ரமணி அவர்கள் மிக உருக்கத்தோடு பேசி, அதன் காரணமாக எத்தனை பெண்கள் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கையும் சொன்னார்கள். என்னிடத்திலுள்ள அந்தக் கணக்கின்படி பார்த்தால்கூட, 1986-ல் 63 வழக்குகள். வர தட்சிணைக் கொடுமையால் இறந்துபோனவர்களுடைய வழக்கு 1986-லே பதிவு செய்யப்பட்டது 63 வழக்குகள். தண்டனை அளிக்கப்பட்டவை 12. விடுதலை செய்யப்பட்டவை 19. நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளவை. 28. இப்படி மொத்தமாகப் பார்த்தால் 1986, 87, 88 ஆகிய மூன்று வருடங்களில் மொத்தம் பதிவு செய்யப்பட்டவை 234 வழக்குகள். தண்டனை அளிக்கப் பட்டவை மொத்தம் 17 தான். விடுதலை செய்யப்பட்டவை 32. நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பவை 116. புலன் ஆய்வு விசாரணையில் இருப்பவை 58, உண்மைக்கு புறம்பானவை என்று முடிவு எடுக்கப்பட்டது 6. விரைவிலே இந்த வழக்குகளை