பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

O

காவல்துறை பற்றி

சுவாதி சிட் ஃபன்ட்ஸ், சென்னை-34, ரூ. 4 லட்சம் கையாடல்; சக்தி பாரத் ஃபைனான்ஸ், சென்னை, ரூ. 2 லட்சம் கையாடல்; தமிழ்நாடு ஃபைனான்ஸ், சென்னை-2, ரூ. 3 லட்சம் கையாடல்; ரூ. 128 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது.

இன்னொரு பட்டியலில் ககேசன் ஃபைனான்ஸ், சென்னை-1, ரூ. 18 லட்சம் கையாடல்; சமாரியா ஃபைனான்ஸ், சென்னை-4, ரூ. 13 லட்சம் கையாடல்; சூர்யோதயா ஃபைனான்ஸ், சென்னை-35 ரூ. 1 லட்சம் கையாடல்.

திரு. பாலசுப்பிரமணியம், நேற்று இன்னொரு நபரைப் பற்றிச் சொன்னார்கள். பெயரைச் சொல்லவில்லை. (குறுக்கீடு). சுதர்சன் என்கின்ற ஒரு நபருடைய பெயரைக் குறிப்பிட்டு, விவரம் தந்திருக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கைகளை நிச்சயமாக இந்த அரசு எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இந்தக் காவல்துறை மானியத்தின் மீதும் ஆயத்தீர் வைத்துறை மானியத்தின் மீதும் மற்றும் தீயணைப்புத்துறை மானியத்தி மீதும் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்த அனை வருக்கும் நன்றியினைத் தெரிவித்து, தந்துள்ள வெட்டுத் தீர் மானங்களைத் திரும்பப் பெறவேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அமர்கிறேன். நன்றி, வணக்கம்.

திரு. கே. ரமணி : தலைவர் அவர்களே, நமது முதல்வர் அவர்கள் பல நல்ல அறிவிப்புகளை எல்லாம் கொடுத்திருக் கிறார்கள். ஒரு விஷயம் நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். போராட்ட காலத்தில் பழி வாங்கும் வகையில் பல போலீசாரும் அதிகாரிகளும் நீக்கப்பட்டிருப்பவர்கள் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அரசு அவர்களுக்கு அழைப்புக் கொடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். அவர் களுக்குப் போலீசாருடைய அசோசியேஷன் ஏற்படுத்தி நடத்துவதற்கு அரசு என்ன நிலையை எடுத்துக்கொள்ள இருக்கிறது என்பதை அறிந்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நான் அப்போதே சொன்னேன். போலீசாருக்காக முதல் குரல் கொடுத்தவன் என்று. நானே சங்கத்தின் தலைவனாக இருந்து அதை நடத்திக் கொண்டிருப்பேன்.