பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

371

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அவருடைய வேண்டுகோளுக்கிணங்க, அந்தப் பழமொழி, அவைக்குறிப் பிலிருந்து நீக்கப்படுகிறது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே . (குறுக்கீடு).

திரு. எம். அப்துல் லத்தீப் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மிக முக்கியமான மகிழ்ச்சிகரமான ஒரு தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் அளித்து, அதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த அவைக்கு அளித்திருக்கிறார்கள். அவையின் சார்பாக, அவையின் உறுப்பினர்கள் சார்பாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட இந்த நல்ல முயற்சிக்கு அதிலே நமக்குக் கிடைத்த வெற்றிக்கு, முதலமைச்சர் அவர்களே முழு முழு காரணம் என்ற காரணத்தினால், அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி).

மு

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இந்த மகிழ்ச்சியிலே நம்மோடு இருந்து கொண்டாடு வதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இங்கில்லை என்கின்ற வேதனை என்னுடைய இதயத்தை ஒருபுறம் குடைந்து கொண்டிருந்தாலும்கூட, வெளியில் இருந்தாலும் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற நம்பிக்கையோடு என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

காவல்துறை குறித்த ஆய்வுரை, தீயணைப்புத் துறை குறித்த விளக்கக் குறிப்புகள், அதைப்போல ஆயத் தீர்வை குறித்த விளக்கக் குறிப்புகள் இவைகளின் மீது நேற்றும், இன்றும் மாண்புமிகு உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் அரிய கருத்துக்களையெல்லாம் எடுத்து வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இறுதியாகப் பேசிய, காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் மிகவும் பொதுவான அறிவுரைகளை, கண்டிக்கின்ற நேரத்திலே கண்டித்து, திருத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு, பொதுவான அறிவுரைகள் பலவற்றை இங்கே எடுத்துக் கூறியமைக்காக அவர்களை நான் பாராட்டவும், நன்றி கூறவும் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். காவல்துறை, எந்த ஒரு கட்சிக்கும் எதிரான, விரோதமான, பகையான ஒரு துறை அல்ல. அப்படிப்பட்ட அந்தத் துறை குறித்து, இங்கே பேசப்பட்ட எல்லாக்