பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

காவல்துறை பற்றி

கட்சித் தலைவர்களுடைய பேச்சுக்களும், உறுப்பினர்களுடைய கருத்துக்களும், ஒரு விரோத மனப்பான்மையோடு கூறப்பட்டவை என்று நான் எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் நல்ல முறையில் காவல்துறை பணியாற்ற வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு எடுத்து வைக்கப்பட்ட கருத்துக்கள் என்றே நான் அவைகளை ஏற்றுக் கொள்கின்றேன். அந்தத் துறையினுடைய பொறுப்பை நான் சேர்த்து வகிக்கிறேன் என்ற காரணத்தினாலே இங்கே நீங்கள் சொன்ன எல்லாக் கருத்துக்களையும் ஏற்று, அந்தக் கருத்துக்களில் ஒன்றிரண்டு தவறானவைகளாக இருந்தாலும் கூட, அவைகளைப் பற்றிய விளக்கங்களை உங்களுக்குக் கூறி, நீங்கள் சுட்டிக் காட்டியதைப் போல தவறு இந்தக் காவல்துறையின்பால் இருந்தால், எந்த முறையிலே அந்தத் திருத்தத்தை செய்வதற்கு என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ, அந்த முயற்சிகளை யெல்லாம் மேற்கொள்வேன் என்று உறுதியளிக்கின்றேன்.

நேற்றைய தினம் மிக முக்கியமாக இந்த ஆய்வுரையிலே ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டு, நேற்றைக்கு தாங்களும் நானும் அவை முன்னவரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கூட ஆய்வுரையிலே உள்ள ஒரு வாக்கியத்தை அகற்றாவிட்டால், இந்த அவையிலே, விவாதத்திலே கலந்து கொள்ளமாட்டோம் என்று பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்புச்செய்து, தங்களுடைய கண்டனத்தை அத்தோடு நிறுத்தாமல், மீண்டும் உள்ளே வந்து அவை நடப்பதற்கு குறுக்கே சில செயல்களைப் புரிந்த காரணத் தினாலே வெளியேற்றப்பட வேண்டிய வேதனையான நிலை உருவாகி, தொடர்ந்து இன்றும் அதே நிலை ஏற்பட்டு, பிறகு தாங்களும் நானும் எவ்வளவோ முயன்றும்கூட, அதற்குப்பிறகு நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் திரு. குமரி அனந்தன், கொறடா திரு. பாலசுப்பிரமணியம் அவர்களும் முயன்றும்கூட அந்த தூதும் பயனளிக்காமல் போய் விட்டது என்று கருதுகிறேன். அவர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாதது வருத்தப்படத் தக்கது. அவர்களும் இருந்து தாக்கியோ அல்லது வேகமாகப் பேசியோ குற்றம் குறைகளை எடுத்துச் சொல்வார்களோயானால், அது எனக்கு மெத்தவும் பயன்படக்கூடும். ஏனென்றால் மக்களைப் பாதுகாக்க, சட்டம் ஒழுங்கு அமைதி, ஆகியவற்றை நிலைநாட்ட, மிக முக்கியமான பொறுப்பைக் கையிலே ஏந்தியிருக்கிற ஒரு மாபெரும் இலாக்கா