பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

காவல்துறை பற்றி

மற்றொன்று, 42-ஆம் பக்கத்தில் 1980-81-ஆம் ஆண்டு ஆய்வு உரையிலே "மயில்சாமி என்பவர் தன் மீது காறி உமிழ்ந்து செருப்பால் அடித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி ஆசிரியர் ஒருவர் கொடுத்த புகாரின் மேல் விசாரணை நடந்தது" என்று இருக்கிறது. எவ்வளவு இழிவான வார்த்தைகள் எல்லாம் அதிலே இடம் பெற்று, ஒரு ஆசிரியர் கொடுத்த புகாரைப் பற்றி மயில்சாமி என்ப வருடைய பெயரும் குறிப்பிடப்பட்டு வெளிவந்திருப்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன். இவைகள் எல்லாம் கூட நீதிமன்ற விசாரணையிலே இருந்த நேரத்திலேதான் இந்த ஆய்வு உரைகள் இந்த மன்றத்திலே வைக்கப்பட்டன என்பதையும் நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

மற்றொன்று, 1982-83-ஆம் ஆண்டு ஆய்வு உரையில் 65-ஆம் பக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஒரு போராட்டத்தைக் குறிப்பிடும்போது, "தடை உத்திரவை மீறி அழகர் சாமி, எம். எல். ஏ., சிவசாமி, வரதராஜன், சின்னச்சாமி கவுண்டர், முத்துச்சாமி கவுண்டர் உட்பட 322 பேர் கைது செய்யப் பட்டார்கள்” என்று. அதன் காரணமாக எழுந்த விளைவுகள் அந்த ஆய்வு உரையிலே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அழகர்சாமி அவர்கள் அதற்கு பதில் அளித்தார்களே அல்லாமல், அந்த ஆய்வு உரையிலேயிருந்து அந்தக் கருத்தை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆய்வு உரையிலே அப்படிப் பட்ட கருத்துக்கள் இடம் பெறுகின்ற காரணத்தால், அதை உறுப்பினர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அதைப் பற்றி பேசவே கூட ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்று தங்களுடைய கருத்துக்களை அவைக்கும் நாட்டுக்கும் அறிவிக்க அதை பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

6J.,

அதே பக்கத்தில் இன்னொரு இடத்தில், “22-11-1982 அன்று மதுரை மேலூரில் பெரியாறு பனிரெண்டாம் கால்வாய் ஆயக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 3,000 விவசாயிகள் பாசனத்திற்கு ண்ணீர்விடக் கோரி வீரண்ண அம்பலம் எம். எல். ஏ. தலைமையிலே மேலூர் வட்டாட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று மனு கொடுத்தார்கள். ஊர்வலத்தினர் ஊர்வலத்தினர் கலந்து செல்லும்போது மேலூர் எல்லையிலே திருச்சிராப்பள்ளி சாலையில் சென்றுக் கொண்டிருந்த பாண்டியன் போக்குவரத்துக் கழகம்,