பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

375

சேரன் போக்குவரத்துக் கழகப் பேருந்துக்களின் மீது கல்லெறிந் தார்கள்” என்று ஒரு எம். எல். ஏ.-வை சம்பந்தப்படுத்தியே அன்றைக்கு ஆய்வு உரை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்கள் அகற்றப்பட வேண்டும் என்று அன்றைக்கு யாரும் கோரவில்லை. அதற்கு மாறாக, அந்த ஆய்வு உரையில் இருந்த கருத்தை எதிர்த்து அன்றைய தினம் பேசப்பட்டு இருக்கிறது

1984-85-ல் 85-ம் பக்கத்தில் ஆய்வு உரையில் ஒரு சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இச்சம்பவம் தொடர்பான கோட்டை காவல் நிலைய குற்ற எண். 1239-ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொதுக்கூட்டத்தில் பொதுக்கூட்டத்தில் முஸ்லீம் இனத்தவரையும், அவர்களது தலைவர் காயிதே மில்லத் பற்றியும் தரக்குறைவாகப் பேசியதாக ராமகோபாலன் மீது கோட்டை காவல் நிலையக் குற்ற எண். 1240/84-ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலையிலே கூட நம்முடைய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர், “எம். எல். ஏ. மாத்திரம் அல்ல; அவர்களுடைய தலைவர்” என்று சொன்னார்கள். காயிதே மில்லத் அவர்கள் எவ்வளவு பெரிய தலைவர் என்பதை நம்முடைய இலக்கியச் செல்வர் உணராதவர் அல்ல. அவருடைய பெயரைப் போட்டு அவரைப் பற்றி இழிவாகப் பேசியதும் இதிலே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதைப் போலவே இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு உரையிலே கூட எம். எல். ஏ.-வை ஆளும் கட்சியோ அல்லது காவல்துறையோ, முதலமைச்சரோ குறை கூறி அந்த ஆய்வு உரையிலே எந்த வாக்கியமும் இடம்பெறவில்லை. அதிலே இடம் பெற்றிருப்பதெல்லாம். பேசிய ஒரு நபர், இதுபோன்ற வன்முறைகளைத் தூண்டுகின்ற வகையிலே பேசிய காரணத்தாலே, எம். எல். ஏ.-வைப் பற்றி மாத்திரமல்ல, அந்த ஊர் ஒன்றியத் தலைவரைப் பற்றியும் பேசிய காரணத்தால், அங்கே இத்தகைய விளைவுகள் எழுந்தன என்று, ஒரு கலவரம் உருவானதற்கான சூழ்நிலை எப்படி அங்கே ஆரம்பமாயிற்று என்பதற்குத்தான் அந்த ஆய்வுரையிலே அதைக் குறிப்பிட்டிருக்கிறார்களே அல்லாமல் வேறல்ல. யாரையும் வேண்டுமென்றே இழிவுபடுத்துவதற்காக அல்ல. நான் காலையிலே சொன்னதைப் போல, பெயரைக் கூட