378
காவல்துறை பற்றி
விரும்புகிறேன். நம்முடைய தமிழ்நாட்டில் சாதிக் கலவரம், மதக் கலவரம், வேறு சில வகுப்புக் கலவரங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறுகின்றன. என்றாலும்கூட,
அண்மையிலே, டெல்லியிலே 2 மாநாடுகள் நடைபெற்றன. ஒரு மாநாட்டில் இந்தியாவினுடைய ஒருமைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த மாநாட்டுக்குத் தமிழக அரசின் சார்பாக நம்முடைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சிலார் அவர்கள் சென்று இருந்தார்கள். அங்கே எடுத்து வைக்கப்பட்ட கருத்துக்களில் இந்தியாவிலே இன்றைக்குப் நடைபெறுகிற அளவுக்கு கலவரங்கள் தமிழ்நாட்டிலே இல்லை என்கின்ற புள்ளி விவரம் அங்கே தரப்பட்டது
பரவலாக
இதற்கு அடுத்து அண்மையிலே டெல்லியிலே இன்னொரு மாநாடு இந்தியப் பிரதமர் திரு. வி. பி. சிங் அவர்கள் கூட கலந்து கொண்டு உரையாற்றிய மாநாடு. எல்லா மாநிலங்களிலும் உள்ள காவல்துறைத் தலைவர்களுடைய கலந்துரையாடல் மாநாடு, அந்த மாநாட்டை ஒட்டி ஒரு புத்தகம் வெளியிடப்பட் டிருக்கிறது. Director General - Inspectors General of Police Conference 1990 என்று அந்த புத்தகத்தினுடைய முதல் வரியிலேயே "During 1989 the law and order situation in the country remains under severe strain," என்றுதான் அந்தப் புத்தகம் ஆரம்பம் ஆகிறது. இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு அமைதி இவைகளைக் காப்பாற்றுவதில் மிகுந்த சோதனையான நிலை, கஷ்டமான நிலை, சிரமமான நிலை இருப்பதை அந்தப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. அப்படி காட்டப்படுகின்ற அந்தப் புத்தகத்திலே கூட இந்தியாவில் காவல் துறையினுடைய திறமை தமிழ்நாட்டிலே எப்படி இருக்கிறது என்பதை விளக்குகின்ற வகையிலே ஒரு தனி பாராவே இதிலே அமைந்து இருக்கிறது. There is a sharp decline in the convictions in major offences in some States. It is not possible to discuss the subject at length. To cite only a few, convictions in murder cases came down from 2,463 in 1987 to 2,072 in 1988 and 922 in 1989. This would not include the figures of Karnataka as already mentioned elsewhere. In 1989, of the 922 convictions secured in murder cases, 707 were convicted in Tamil Nadu itself. இந்தியா