கலைஞரின் சட்டமன்ற உரைகள்
381
22 ஆண்டுகளும் ஆகிறது. இந்த நிலையில் மதுவிலக்குப் பிரிவை காவல் துறையிலே இணைத்து விட்டதால் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' எழுதியுள்ளது. இது மிகத் தவறான கருத்து. ஏனென்றால், மதுவிலக்குக் துறை போலீசார், அந்தத் துறையிலே இருந்த பொழுதும், சட்ட ஒழுங்கு அமைதியைப் பாதுகாக்கின்ற போலீசார் இன்னொரு பிரிவாக இருந்தபொழுதும் பணி, ப்ரமோசன்ஸ், பதவி உயர்வுகளெல்லாம் இருபாலாரையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் வழங்கப்பட்டது. எனவே அவர்கள் தனித்தனியாக இருந்தாலும் பதவி உயர்வு வழங்குவதிலே இருவரையும் ஒன்றாகச் சேர்த்துத்தான், அப்படி எண்ணிப்பார்த்துத்தான் வழங்கப்படும். அவர்கள் ஒன்றாக இணைந்தால் அதற்காக அந்தப் பதவி உயர்வு அவர்களுக்குப் பாதிக்கப்பட மாட்டாது. மதுவிலக்குப் பணி இப்போது காவல் துறையோடு சேர்க்கப்பட்டதே தவிர இதற்கு முன்பே மதுவிலக்குத் துறையிலே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களும், சீனியாரிட்டியைப் பொறுத்தவரையில் பதவி உயர்வுக்கு ஒட்டு மொத்தமாகக் கணக்கிலே எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். எனவே இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்குவதால் பதவி உயர்வு எந்தவகையிலும் பாதிக்காது.
அதே ஏட்டில் இன்னொரு கருத்து, 1976-ல் நியமனம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் 1989-ல் தான் பதவி உயர்வு பெற்றார்கள் என்றும், 1979-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு இன்னும் தரப்படவில்லை என்றும் 'இண்டியன் எக்ஸ்பிரஸ்'-லே கூறப்பட்டுள்ளது. மேலும் 1980 முதல் 1987 வரை உதவி ஆய்வாளர் நேரடி நியமனம் நிறுத்தப்பட்டது என்றும் அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது. 1979-லே தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு இந்த ஆண்டு பதவி உயர்வு கிடைக்கும் என்பதை இந்த மன்றத்திலே நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). 1980-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை நேரடித் தேர்வு நடத்தாததற்கு நாங்கள் பொறுப்பல்ல. காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் கூட சொன்னார். ஒரு விகிதாச்சாரம் வைக்கவேண்டுமென்று. ஏற்கெனவே இருக்கிறது. 70 : 30 என்று, நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கும், ப்ரமோஷன் மூலம் வருவதற்கும் 70 30 என்ற விகிதாச்சாரம்