பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

காவல்துறை பற்றி

கொண்டு அங்கே மரணம் அடைந்திருக்கிறார்கள். அமைதியை நிலைநாட்ட உடனடியாக டி. ஜி. பி. மற்றும் ஐ. ஜி. (லா அண்ட் ஆர்டர்) மூலமும், கலெக்டர் மூலமும் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 2 காவல்துறை துணைத் தலைவர்கள், 4 மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேவையான இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப் பட்டு இருக்கிறார்கள் தீவிர போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் சம்பந்தமாக அவ்வப்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 43 புகார்கள் பெறப்பட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இரு தரப்பிலும் 439 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 253 பேர் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1987-ல் நடந்த ஜாதிக் கலவரத்தின் போது பல கொலை வழக்கு களில் சம்பந்தப்பட்ட முக்கியமான எதிரிகளும் தற்போது முன் கூட்டியே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சி. ஆர். பி. சி. 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டது. மதுபானக் கடைகளை மூடுதல், வெடி மருந்துக் கடைகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. தனியார் வைத்திருந்த 143 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. வீச்சரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் 150-க்கு மேல் கைப்பற்றப் பட்டுள்ளன. பறக்கும் படை என்ற பெயரால் சமூக விரோதிகள் சிலர் வன்முறையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டு; அந்தப் படையை ஒழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளச் சாராய வியாபாரமும் இத்தகைய வன்முறைக்கும், கலவரத்திற்கும் அடிகோலுவதாக இருப்பதாலும், அந்தப் பகுதியில் கள்ளச் சாராயத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது.

இதற்கிடையே நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடத்திலே தொடர்பு கொண்டார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. வீரையன்