பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

-

காவல்துறை பற்றி

அவர்கள் சொன்னார்கள் முஸ்லீம்களுக்கு இந்த அரசிலே சரியான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று சொன்னார்கள். நான் சரியாக இத்தனை பர்சென்ட் என்று அந்தக் கணக்கை எடுத்துச் சொல்ல விரும்பவில்லை அது இயலாது என்ற காரணத்தால். ஏனென்றால், ஆட்சிக்கு வந்து இன்னும் இரண்டாண்டுக் காலம் கூட சரியாக முடியாமல், சிறுபான்மை மக்களுக்கு எப்படி, எப்படி அளிக்கப்பட்டிருக்கிறது, யார், யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் அறுதியிட்டுக் கூற இயலாது. ஆனால் இந்த அரசினுடைய உள்ளுணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவட்டங்களில் ஒரு கலெக்டரை கலெக்டரை முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவராகப் போட வேண்டுமென்றுதான், திரு. ஜலால் அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தோம். அவர் அகால மரணம் அடைந்துவிட்டார். அவர் மரணம் அடைந்த பிறகு, திருச்சி மாவட்டத்திற்கு வேறு ஆட்சித் தலைவர் நியமிக்கப்பட்டாலும் கூட, ஒரு முஸ்லீம் கலெக்டர் இல்லையென்ற அந்தக் குறையைத் தீர்க்க, தர்மபுரி மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக திரு. அலாவுதீன், ஐ. ஏ, எஸ். அவர்களை அங்கே அனுப்பிய பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு என்பதை திரு. லத்தீப் அவர்கள் மறந்துவிடக் கூடாது.

அது மாத்திரமல்ல, இங்கே நம்முடைய நண்பர் திரு. ராஜேந்திரன் அவர்களோ திரு. சொக்கர் அவர்களோ குறிப்பிட்டதைப் போல, டி. ஐ. ஜி. (சி. ஐ. டி.) ஒற்றர்களின் தலைவராக, காவல்துறை நுண்ணறிவுப்பிரிவுத் தலைவராக இருக்கின்றவரே இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்தான் என்பதை திரு. லத்தீப் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரா என்று எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் அவர் அடிக்கடி குல்லாய் போடுகிற ஆபீசர் அல்ல. (சிரிப்பு). அதனால் ஒருவேளை, அவரை அவர் இஸ்லாமியர் அல்ல என்று மறுக்கிறாரா என்று எனக்குப் புரியவில்லை. எனவே எல்லா வகையிலும், இஸ்லாமியர்களுக்கு சிறுப்பான்மை மக்களுக்குத் தரவேண்டிய இடத்தைத் தரவேண்டுமென்ற உள்ளுணர்வு என்பது இந்த அரசுக்கு இருக்கிறது. அதைப்போலவே திண்டுக்கல் சம்பவத்தில்,