388
காவல்துறை பற்றி
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் பதில் சொல்லியதற்குக் காரணம், மாண்புமிகு உறுப்பினர் திரு. அப்துல் லத்தீப் அவர்கள் பேசியதால்தான். அது அவைக் குறிப்பில் இருக்கிறது. அதைத் தலைவர் எடுக்கவில்லை. அது அவைக் குறிப்பிலே இருக்கிறது. அவர் பேசியது பத்திரிகையில் வந்து ஓகோ, பெரிய பதவிகளில் நம்மவர் யாரும் நியமிக்கப்படுவதில்லையோ” என்று இஸ்லாமியர் கருதிவிடக் கூடாது என்பதற்காகத்தான், இந்தப் பதவியிலே ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டிய தவிர்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது என்பதை மாண்புமிகு உறுப்பினர் திரு. பீட்டர் ஆல்போன்ஸ் அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல, இந்த அரசு வந்ததற்கு பிறகு இப்படிச் செய்திருப்பதாக சொன்னார்கள். அது மாத்திரமல்ல, சிறுபான்மை நலக்குழு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மை நலக்குழுத் தலைவராக ஒரு கிறிஸ்தவரை, அவரும் சிறுபான்மையினர்தான், போடவில்லை அல்லது மொழி என்ற அடிப்படையில் ஒரு மலையாளியைத் தலைவராக போடவில்லை. அல்லது ஒரு தெலுங்கரைத் தலைவராக போடவில்லை. அதிலே கொட்டாரக்கரா என்கிற மலையாளி இருக்கிறார். ஒபுல் ரெட்டி என்கிற தெலுங்கர் இருக்கிறார். அதுபோல கன்னட மொழி பேசுகிற ஷெட்டி என்கிற கோவையைச் சேர்ந்தவர் இருக்கிறார். அதுபோல கிறிஸ்தவர் மரியநல்லு என்பவர் துணைத் தலைவராக இருக்கிறார். அதுபோல ஜைன மதத்தைச் சார்ந்த சாந்திலால் ஜெயின் என்பவர் இடம் பெற்றிருக்கிறார். இவ்வளவு பேரும் இடம் பெற்றிருந்தாலும் கூட, அதற்கு அப்துல் ஜப்பார் என்கிற எக்ஸ் எம். எல். ஏ. அவர்கள் தான் தலைவராக அங்கே இருக்கிறார் என்பதை ஏனோ மாண்புமிகு உறுப்பினர் திரு. அப்துல் லத்தீப் மறந்துவிட்டார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவரையே போட்டால்தான் அவருக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ? (சிரிப்பு).
நாம்
திரு. எம். அப்துல் லத்தீப் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் இதை எல்லாம் மறந்து பேசவில்லை. நான் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளக்