38
காவல்துறை பற்றி
பைத்தியக்காரன் தான். அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனம் இன்றைய தினம் நாட்டில் பரவலாக அதிலும் வேகமாக ஏற்படுவதற்கு இந்தப் பேச்சுக்கள் காரணமாக இருக்கின்றன. அவைகள் எல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்று இதே மாமன்றத்தில் என்னால் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதற்காக நான் மிக மிக வருந்துகிறேன்.
இன்னொரு நிகழ்ச்சியையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 16-ம் தேதி காலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. அதைச் சொல்வதின் மூலமாக போலீஸ் எந்தவிதமான பட்சபாதமாக நடக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன், பட்சபாதமாக எந்த அளவுக்கு நடக்கவேண்டும் என்று தூண்டி விடப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக இதை நான் சொல்லுகின்றேன். 16-ம் தேதி காலை 101/2 மணிக்கு, மயிலாப்பூரில் திரு. கபாலி என்பவரின் கடைக்கு அருகாமையில், மந்தவெளியில், ஒரு நண்பர் காரில் வந்து கொண்டிருந்தார். அவர் வந்து கொண்டிருந்த கார், அதன் முன்னால் சென்று கொண்டிருந்த ரிக்ஷாவின் மீது மோதி ரிக்ஷா அடிபட்டது. கார் ரிக்ஷாவில் மோதியதும், ரிக்ஷாக்காரன் அடிபட்ட வேகத்தில் பொறுமை யிழந்து காரில் வந்தவரைப் பார்த்து ஏதோ சொல்ல, காரில் வந்தவர் கீழே இறங்கி அந்த ரிக்ஷாக்காரரை செருப்பால் அடிக்க கையை ஓங்கியிருக்கிறார், இதற்குள் அங்கு கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதும், காரில் வந்தவர், 'நீங்கள் எல்லோரும் போய்விடுங்கள், இல்லையென்றால் நான் இங்கே மறியல் செய்வேன்' என்று சொல்லி சாலையின் குறுக்கே படுத்து ஒரு மணி நேரம் மறியல் செய்து போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியிருக்கிறார். இத்தனையும் நடந்த பிறகு இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டது யார் தெரியுமா? பரிதாபத்திற்குரிய அந்த ரிக்ஷாக்காரன், ஒரு பாவமும் அறியாது காயமடைந்த அந்த ரிக்ஷாக்காரன். இதைப்பற்றி மேலும் விசாரித்ததில், அந்த காரில் வந்தவர், அங்கிருந்தவர்களிடம் “நான் யார் தெரியுமா? நான் 'தூக்குமேடை'யாக்கும் என்னை ஒருவரும் ஒன்றும் செய்துவிட முடியாது" என்று சொல்லி அங்கிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார். (எதிர்க்கட்சி தரப்பிலிருந்து - ஷேம், ஷேம்...) இந்த விதமாக பட்சபாதமான நிலைமை சென்னை மாநகரத்தில்