பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

காவல்துறை பற்றி

மலர்' பத்திரிகையிலே வெளிவந்த செய்தியும், அறிக்கையும் அதில் 'பெரம்பலூர் அருகே, வி. களத்தூரில் நடந்த சம்பவத்தில் குண்டு வீச்சு மற்றும் தாக்குதலில் காயமடைந்தவர்கள் திருச்சி மற்றும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். திருச்சி பெரிய ஆஸ்பத்திரியில் அப்துல் காதர், வயது 60, அப்துல் முத்தலிப் வயது 58, அமானுல்லா வயது 17, மற்றும் கிருஷ்ணமூர்த்தி, ஆகிய 4 பேர்களும் அவசர 4 சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதில் முதல் 3 பேர்கள் ஆண்கள் பிரிவிலே உள்ளபடுக்கைகளிலே கிடத்தப் பட்டுள்ளார்கள். கிருஷ்ணமூர்த்தி வெளியிலே உள்ள வராண்டா திண்ணையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் டி. ஐ. ஜி. சரவண பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி, ஜீவரெத்தினம், டி. எஸ். பி. கல்யாணசுந்தரம், உதவிக் கலெக்டர் சவுந்திரராஜன் ஆகியோர் திடீரென்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார்கள். தலையில் படுகாயம் பட்டு. திண்ணையில் படுத்திருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்ததும் கலெக்டரும் டி. ஐ. ஜி.-யும் திடுக்கிட்டார்கள். அவருக்கு ஏன் படுக்கை வசதி செய்து கொடுக்கவில்லை என்று கேட்டார்கள் மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி சிவசுப்பிரமணியத்தைக் கூப்பிட்டு, உடனே படுக்கை வசதி செய்து கொடுக்குமாறு கண்டித்தார். அதுவரையில் செய்து கொடுக்கக்கூடிய சூழ்நிலை இருந்தும் செய்து கொடுக்கப்படாமல் இருக்கிறது. கலெக்டர் போய் சொன்னவுடன் உடனடியாக செய்து கொடுக்கப்பட் டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரையும் சந்தித்து கலெக்டர் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப் படுமென்றும், தெரிவித்தார். அங்கே மாலை மலர் நிருபரிடம் கலெக்டர் நிலவரம் குறித்துக் கூறியது - அதைப் பற்றித்தான் திரு. லத்தீப் அவர்கள் தவறான ஸ்டேட்மென்ட் என்று சொன்னார். அது என்ன என்று படித்துக்காட்ட விரும்புகிறேன்.

"2, 3, இளைஞர்களால்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. பாதையில் போகாமல், மைதானம் வழியாக முஸ்லீம்கள் நடந்து வந்ததால் இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். வழக்க மாக அந்தப் பாதையிலே முஸ்லீம்கள் நடப்பதில்லை. நேற்று