பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

399

காதங்கரை, தஞ்சை மாவட்டத்தில் மருகூர், வட ஆற்காடு மாவட்டத்தில் அம்பலூர், காமராஜர் மாவட்டத்தில் கம்மாபட்டி, திருச்சி மாவட்டத்தில் சிந்தாமணிபட்டி, பசும்பொன் தேவர் மாவட்டத்தில் சிப்காட் காம்பிளெக்ஸ், சேலம் மாவட்டத்தில் மவுசி, இவை தவிர, புறக்காவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக மாற்றப்பட்டவை. இராமநாதபுரம் மாவட்டத்திலே உத்தரகோசமங்கை, குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம், மதுரை மாவட்டத்தில் உத்தரமங்கலம், புதிய புறக்காவல் நிலையங்கள். செங்கை அண்ணா மாவட்டத்தில் பெரியகுப்பம், தஞ்சை மாவட்டத்தில் பட்டீஸ்வரம், மேலும் குமரி மாவட்டத்திலே குலசேகரம் காவல் நிலையம், வட்டக் காவல் நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து, செங்கை அண்ணா மாவட்டத்திலே எல்லை

யிலே இருக்கும் 9 காவல் நிலையங்கள் சென்னைப் பெருநகர்ச் சரகக் காவல் நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது, வில்லிவாக்கம் விருகம்பாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, கருணாநிதி நகர் ஆகிய இவை பெருநகரக் காவல் சரகத்தோடு இணைக்கப்பட்டு விட்டன. இராஜமங்கலம், மீனம்பாக்கம், பரங்கிமலை, ஆதம்பாக்கம் இவை சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இன்னும் கொண்டு வரப்பட வில்லை. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

திரு. உ. ரா. ரா. வரதராசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த 9-இல் 4-ம் கொண்டு வரப்படுவது மட்டுமல்லாமல், சென்னை மாநகர எல்லைக்குள்ளே அமைந் திருக்கக்கூடிய திருமங்கலம், கொடுங்கையூர், மற்றும் திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், கொரட்டூர், மதுரவாயல் ஆகிய இடங்கள் எல்லாம் முகமூடி கொள்ளைகள் நடக்கக்கூடிய பகுதி. ஆகவே, அவற்றையும் சேர்த்துக் கொண்டு வந்தால், கொள்ளையைத் தடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும். அதையும் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் பரிசீலிக்கவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன்.