400
காவல்துறை பற்றி
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இயன்ற வரையில் பரிசீலிக்கப்படும்.
கடந்த ஆண்டு கூம்பு ஒலிபெருக்கி வைக்கக்கூடாது என்று தடை இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். அந்தத் தடை நீக்கப்படும் என்று அறிவித்தேன். அதற்கேற்ப 15-6-1989-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, கூம்பு ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது.
அதைப் போலவே டி. ஐ. ஜி. அலுவலகம் இராமநாத புரத்திலே உள்ளதை எங்கே வைப்பது என்கின்ற ஒரு பிரச்சினை வந்தபொழுது, அதை நம்முடைய சொக்கர் அவர்களும், பெ. சீனிவாசன் அவர்களும் சேர்ந்து ஓரிடத்தைச் சொல்ல, நம்முடைய தென்னரசு அவர்களும் ஓரிடத்தைச் சொல்ல, அதற்குப் பிறகு மெஜாரிட்டி கருத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, விருதுநகரிலே வைக்கப்படும் என்று சொன்னேன்.
இருந்தாலும்கூட, அதற்குப் பிறகு, இராமநாதபுரத்திலே உள்ளவர்கள் அங்கிருந்து அந்த இடத்தை மாற்றக் கூடாது என்று சொன்னதன் காரணமாக ஒரு சமரச ஏற்பாடாக இராமநாத புரத்திலே 4 நாளும், விருதுநகரிலே 3 நாளும் அந்த டி. ஐ. ஜி. அலுவலகம் இயங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, அது இயங்கி வருகின்றது. இதுவும் அன்றைக்கு சொன்னது செய்யப்பட்ட ஒன்றாகும்.
அதைப்போலவே, தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ். இவர்கள் இன்றைக்கு 9 பட்டாலியன் இருக்கிறார்கள். ஆவடியில், திருச்சியில், பழனியில், கோவை புதூரில், மணிமுத்தாறில், டெல்லியில், 9 பட்டாலியன் இருக்கிறார்கள். ஒவ்வொரு பட்டாலியனும் சுமார் 1,000 பேர் வீதம் 9,000 பேர் அதிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியிலே இன்றைக்கு இருக்கின்ற அந்த திஹார் சிலைச்சாலையைக் காவல் காப்பதே நம்முடைய தமிழ்நாடு ஷ்பெஷல் போலீஸ்தான் என்பதை அறிந்தால் உறுப்பினர்களுக் கெல்லாம் மகிழ்ச்சி பொங்கும் என்றே நான் கருதுகின்றேன். அது மாத்திரமல்ல, அங்கே குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் இவர்களுக்கெல்லாம்கூட பாதுகாப்பாக இருப்பது