பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

405

எல்லாம் ஒழித்ததன் மூலம் இன்றைக்கு லட்சம் பேர் 'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு தெருவில் நடமாட முடிகிறது.

அடுத்து ஹெல்மெட், ஹெல்மெட் இனிமேல் அணியத் தேவையில்லை. அவர்களுடைய இஷ்டத்திற்கே விட்டுவிடு கிறோம் என்று சொன்னவுடன், இந்த அவையிலேயே அதிகமாக எகிறிக்குதித்தவர் தீட்சிதர் அவர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். (சிரிப்பு). ஹெல்மெட்டிற்கம் அவருக்கும் உள்ள தொடர்பு அந்த அளவிற்கு, ஹெல்மெட் அணிந்து ஒரு கல்லூரி மாணவனைப் போல அன்றைக்குத் துள்ளிக் குதித்தார். அவ்வளவு மகிழ்ச்சியைத் தெரிவித்தார். கட்டாயமாக அணிய வேண்டுமென்ற நிலையைத் தவிர்த்த காரணத்தால் பெரியதாக எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடவில்லை. ஹெல்மெட் அணிந்திருந்த காலத்தில், நாம் இந்த உத்தரவைப் போடுவதற்கு முன்பு, ஜனவரி மாதத்தில் ஹெல்மெட் அணிந்திருந்தும் விபத்திற்கு ஆளாகி இறந்தவர்கள் 95 பேர், - இது ஜனவரியில், கடந்த ஆண்டில். பிப்ரவரியில் 58 பேர், மார்ச்சில் 66 பேர். ஏப்ரலில் 67 பேர். மே மாதத்தில் 74 பேர், ஜூனில் 76 பேர், ஆக மொத்தம் 436 பேர்.

ஹெல்மெட் அணியத் தேவையில்லை, அது அவரவர் களுடைய இஷ்டத்தைப் பொறுத்தது என்று சொன்ன பிறகு ஆனாலும் ஆங்காங்கு விளம்பரங்களிலே ஹெல்மெட்டை அணியுங்கள் என்று சொன்னோம், கட்டாயம் இல்லை, இருந்தாலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹெல்மெட் தேவை என்றெல்லாம் விளம்பரப்படுத்தினோம். அதற்குப் பிறகு - ஜூலை 68, ஆகஸ்ட் 72, மரணம்; செப்டம்பர் 54, அக்டோபர் 75, நவம்பர் 56, டிசம்பர் 61, மொத்தம் 386. கட்டாயம் என்று இருந்தபோது 436. கட்டாயம் இல்லை என்று ஆக்கப்பட்ட பிறகு 386 தான்.

மேலும் போலீசாருக்குத் தேவையான வசதிகளைச் செய்வதில் மிக முக்கியமானது. அவர்களுக்கு தொலைபேசித் தேவை. சிலர் முணுமுணுக்கக்கூடும். ஆம். தொலைபேசி கொடுத்து என்ன, எடுத்துப் பேசினால்தானே என்று சிலர் முணு முணுக்கக்கூடும். இனிமேல் அவர்கள் பேசுவார்கள் என்ற உறுதியோடு, இப்போது தொலைபேசி வசதி அவர்களுக்குச்