கலைஞரின் சட்டமன்ற உரைகள்
407
அன்றைக்கு இருந்த அரசு 35.60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மையத்தைக் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்தது. 9-7-1987-ல். அதன்படி 30-10-1987-ல் செலவுக்காக ரூ. 2 இலட்சம் அனுமதிக் கப்பட்டது. அதற்கு அடித்தளம் எல்லாம் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு பணம் ஒதுக்கப்படவில்லை. அரசாங்கம் பணம் ஒதுக்கும் என்று பொதுப்பணித்துறையும் எதிர்பார்த்து, மேலும் 7.2 இலட்சம் ரூபாயைச் செலவழித்தது. அரசாங்கம் அந்தப் பணத்தையும் பொதுப்பணித்துறைக்கும் தரவில்லை. மேலும் ஒதுக்கவும் இல்லை. எனவே இந்தத் திட்டம் கைவிடப்படும் நிலைமைக்கு இப்போது வந்துவிட்டது. அதை மீண்டும் எடுத்து நிறைவேற்ற, இந்த அரசு இப்போது பொறுப்பேற்றுக்கொண்டு, அதை உடனடியாக நிறைவேற்ற நடப்பாண்டில் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்தப் போலீஸ் மெஸ் சென்னையிலே அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதைப்போலவே சென்னை நகரத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை எழுகிற நேரத்திலே வெளியூரிலேயிருந்து தருவிக் கப்படுகிற காவலர்கள் - நான் முதலிலே சொன்னது அதிகாரிகள் காவலர்கள், அவர்கள் தங்கி ஓய்வு எடுக்க, உணவு அருந்த அதற்கு ஒரு இடம் சுமார் 200 பேரிலேயிருந்து 300 பேர்கள் வரையிலும் ஓய்வு எடுக்கக்கூடிய ‘டார்மிட்டரிகள்' சென்னையிலே கட்டுவதற்கு 10 இலட்சம் ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
—
நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல, மொத்த சிறப்புக் காவல் அணிகள் அதாவது தமிழ்நாடு ஸ்பெசல் போலீஸ் - 9 என்று சொன்னேன். ஒரு அணிக்கு ஆயிரம் பேர் வீதம் 9 ஆயிரம் பேர்கள் என்று சொன்னேன். இந்த அணிகள் செயல் படுகின்ற இடங்களில் எல்லாம், அவர்களுடைய சமையலுக்காக அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவது விறகுகளாகவே இது வரையிலும் இருக்கிறது. இந்த விறகுகளை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியதாக இருக்கிறது இல்லாவிட்டால் பக்கத்திலேயிருக்கிற காடுகள் அழியநேரிடுகிறது. எனவே, அதற்குப் பதிலாக இந்த 9 அணிகள் தங்குகின்ற இடத்திற்கும் காஸ் அடுப்புகளை கொடுப்பதற்கு ஒரு செயற்குறிப்பு