பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

காவல்துறை பற்றி

காவல்துறைத் தலைவரிடமிருந்து அரசு பெற்று, இந்த 9 அணி களுக்கும் மற்றும் ஆவடியிலுள்ள ரிசர்வ் போலீஸ் படைக்குமாக, மொத்தம் 10 அணிகளுக்கும் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் எரிவாயு அடுப்புகளை வாங்கிக் கொடுக்க அரசு ஆணை பிறப்பிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உட்

காமராஜர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் அவர்கள் குறிப்பிட்ட ஜாதிக் கலவரங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ராஜபாளையம் தற்போது சிவகாசி உட்கோட்டத்தில் சப்- டிவிஷனிலே இருக்கிறது. ஒரு நிரந்தரமான ஏற்பாடாக அங்கே அமைதியை ஏற்படுத்துவதற்காக இப்போது செய்யப்படுகிறது. சிவகாசிக்கும், ராஜபாளையத்திற்கும் இடையே 40 கிலோமீட்டர் தொலைவு. ராஜபாளையத்தில் இன்றைக்கு கலவரம் என்ற செய்தியை அறிந்து சிவகாசி சப்-டிவிஷனிலிருந்து, உ கோட்டத்திலுள்ள துணைக் கண்காணிப்பாளர். ராஜபாளையத் திற்கு வருவதற்குள்ளாக நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய் விடுகிறது. அதனால்தான் முன்னேற்பாடாக போலீசார் செயல்பட வில்லை என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இங்கே சொல்லப் பட்டதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். எனவே, இந்த நிலையைச் சமாளிக்க ராஜபாளையத்தில் ஒரு துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுவது அவசியம் என்று கருதி ராஜபாளையத்தில் அமைக்கப்படும் அந்த உட்கோட்டத்தில் கீழ்க்காணும் காவல் வட்டங்கள், காவல் நிலையங்கள் அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜபாளையம் சப்-டிவிஷன். அதிலே ராஜபாளையம் நகரம் தெற்கு சர்க்கிள் நிலையம். அதன் கீழே ராஜபாளையம் நகரம் தெற்கு காவல் நிலையம். அடுத்து ராஜபாளையம் ஊரக வடக்கு சர்க்கிள் ஸ்டேஷன். அதன் கீழே அடங்கும் காவல் நிலையங்கள் ராஜபாளையம் நகரம் வடக்கு கீழ்ராஜகுலராமன். சேத்தூர் தளவாய்புரம்.

ராஜபாளையத்தில் குற்றப்பிரிவு, 'கிரைம் பிரான்ச்' தனியாக இயங்கும். திருவில்லிபுத்தூர் நகரம், திருவில்லிபுத்தூர் தாலுக்கா, மம்சாபுரம் ஆகிய காவல் நிலையங்கள் அந்த சப்- டிவிஷனில் அடங்கும்.