பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

காவல்துறை பற்றி

புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்துவதற்கு மக்கட் தொகை, தீ அபாயம் உள்ள இடம், அதனுடைய தொலைவு இவைகளை எல்லாம் கணக்கிட்டு ஏற்படுத்துகிறோம். அந்த அடிப்படையிலே இந்த ஆண்டு புதியதாக அமைக்கப்பட இருக்கின்ற தீயணைப்பு நிலையங்கள் - திருச்சி மாவட்டத்தில்,

-

லுப்பூர், செங்கை-அண்ணா மாவட்டம் திருத்தணி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், தென்னாற்காடு மாவட்டம் மரக்காணம், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் - ஜவ்வாது மலை, மதுரை மாவட்டம் கடமலைக்குண்டு, காமராஜர் மாவட்டம் - திருச்சுழி, சிதம்பரனார் மாவட்டம் கழுகுமலை, இராமநாதபுரம் மாவட்டம் - ஏர்வாடி (குறுக்கீடு), அவர் சொன்னதை அவரே மறந்துவிட்டார் போல் இருக்கிறது.

-

தலைவர் அவர்களே, காவலர்களுக்குக் குடியிருப்புகள் பற்றி நேற்றைக்கு நம்முடைய திரு. பாலசுப்பிரமணியம் அவர் களும், இன்றைக்கு நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்கட்சி சார்பாகவும், மற்றும் லத்தீப் அவர்களும் மற்றும் பேசிய எல்லா தலைவர்களும், உறுப்பினர்களும் இங்கே எடுத்துக் கூறியிருக் கிறார்கள்.

கு

தலைமைக் காவலர்களுடைய மொத்த எண்ணிக்கை, 6,830. அதிலே குடியிருப்பு வசதி பெற்றவர்கள் 3,077. பெறாதவர்கள் 3,763; காவலர்களுடைய மொத்த எண்ணிக்கை 53,644. குடியிருப்பு வசதி பெற்றவர்கள் 22,433. வசதி பெறாதவர்கள் 31,211 அதாவது இதுவரை 42 சதவிகிதம் பேர்தான் குடியிருப்பு வசதியைப் பெற்றிருக்கிறார்கள். அரசு 80 சதவீதம் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதை அடையவேண்டு மானால் 3,003 தலைமைக் காவலர்களுக்கும், 24 ஆயிரத்து தொள்ளாயிரத்து சொச்சம் காவலர்களுக்கும் குடியிருப்பு கட்டித் தர வேண்டும். அதிலே இப்போதுள்ள அந்த மதிப்பின்படி 1.15 இலட்சம் ரூபாய் ஒரு குடியிருப்புக்குச் செலவாகிறது. எனவே கட்டித்தரப்பட வேண்டிய மீதமுள்ள இந்தக் குடியிருப்புகளுக்கு 321.68 கோடி ரூபாய் தேவைப்படும். அதை ஓரளவு குறைத்து