பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

காவல்துறை பற்றி

படை இன்றைக்குப் பெருகி, 857 பேர் இப்போது பெண் போலீசார் இருக்கிறார்கள். இன்னும் அதிகம் பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டு மேலும் 800 பெண் காவலர்கள், முதல் நிலைக் காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இறுதியாக, ஆயத்தீர்வைத் துறையைப் பற்றி யாரும் அதிகமாகப் பேசவில்லை. ஒரு வேளை, பேசித் தீர்ந்துவிட்டது. இனிமேல் கேட்கவா போகிறார் என்று சலித்து போய்விட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும், பத்திரிகைகளில் வந்திருக்கிற தேதிகள் எல்லாம் சரியானவைகள் அல்ல. இன்னும் எந்தத் தேதியில் என்று நிர்ணயிக்கப்படவில்லை. உற்பத்தி முழுவதும் அரசின் சார்பிலே இருக்கின்ற 'டாஸ்கோ' மூலமாகத்தான் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் எந்த மாற்றமும் கிடையாது. அதைப் போலவே டெண்டர் விடப்படும். நேற்றைக்குப் பேசிய அசேன் கூடக் குறிப்பிட்டார்கள். டெண்டர், ஏலம், இவைகளெல்லாம் கூடாது, ஆங்காங்கு நலிந்தவர்களுக்கு அந்தக் கடைகளைத் தரவேண்டும் என்று குறிப்பிட்டார். முன்பிருந்த ஆட்சியிலே அப்படித்தான் நலிந்தவர்கள் என்ற பெயரால் பல பேருக்குத் தந்தார்கள். முன்பிருந்த ஆட்சியில் சாராயக் கடை ஏலம் எடுத்தவர்கள் மாத்திரம் தரவேண்டிய பாக்கி 1988-லே அவர்கள் ஆட்சியை விட்டுப் போகிற நேரத்தில் 33 கோடியே சொச்சம் ரூபாய். சாராயக் கடை ஏலம் எடுத்தவர்கள் மூலமாக வரவேண்டிய பாக்கி 33 கோடியே சொச்சம் ரூபாய். அதை இந்த ஆட்சி வந்த பிறகு, அதிலே இரண்டு கோடிதான் வசூலித்து இருக்கிறது. மேலும் வசூலிப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதுமாத்திரமல்ல, அப்போதிருந்த ஆட்சியில் அந்தக் கடைகள் எல்லாம் ஏலம் விடப்படாமல் முதலிலே ஏலம் விடப்பட்டது. அன்றைக்கு இருந்த அந்தத் துறையினுடைய அமைச்சர் எஸ். டி. எஸ். அவர்கள் தனியாருக்குத் தரமாட்டோம்,