கலைஞரின் சட்டமன்ற உரைகள்
415
ஏலம்தான் விடுவோம். தனித்தனியாகக் கொடுத்தால் கட்சிக்காரர்களுக்குக் கொடுத்துவிட்டோம் என்கின்ற கெட்ட பெயர் வரும், ஆகவே தரமாட்டோம் என்று இந்த அவையிலே முழக்கம் செய்தார். அதற்குப்பிறகு ஏலத்தை நிறுத்திவிட்டு, தனித்தனியாக எல்லோருக்கும் கொடுத்தார்கள். கொடுத்த பிறகு சில பேர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டார்கள், கட்சிக்காரர்களுக்கே கொடுத்துவிட்டார்கள். எனவே, அதையெல்லாம் ரத்துச் செய்து ஏலம் விடவேண்டும் என்று வழக்குப் போட்டார்கள். உச்ச நீதிமன்றத்திலே வழக்கு வருகிற நேரத்தில் அரசு அவசரம், அவசரமாக, தன்னுடைய வழக்கறிஞர்களை எல்லாம் கலந்தாலோசித்து, ஃபைல் இருக்கிறது, படித்துப் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்.
வழக்கறிஞர்களும், அரசுத்துறை அதிகாரிகளும் சொன்னார்கள், அமைச்சருக்குச் சொன்னார்கள், அன்றைக்கு இருந்த துறையினுடைய அமைச்சருக்குச் சொன்னார்கள். அதில் நமக்குக் கெட்ட பெயர் வரும், கட்சிக்காரனுக்குக் கொடுத்து விட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டிலே வழக்குப் போட்டிருக் கிறார்கள். சுப்ரீம் கோர்ட் அதை ஒத்துக்கொண்டு தீர்ப்பளிக்கும். எனவே, அரசிற்குக் கெட்ட பெயர் வரும் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு, அந்த அமைச்சர் உடனடியாக இனிமேல் - ஏலம் விடப்படும் என்கின்ற குறிப்பை எழுதி, தனித்தனியாகக் கொடுக்கப்பட்ட நிலையை அன்றைக்கே மாற்றியிருக்கிறார். அசேன் சொன்ன யோசனையைக் கேட்டால், மறுபடியும் சுப்ரீம் கோர்ட்தான். அதுமாத்திரமல்ல, சுப்ரீம் கோர்ட்டிற்காக நான் பயப்படவில்லை. இதிலே யாருக்கும், கட்சிக்காரர்களுக்கு ஆதாயம் தருவதற்காக இந்தக் காரியம் நடைபெறக்கூடாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். கேட்கலாம், அசேன் போன்றவர்கள். மற்றவர்கள் கேட்கலாம். 'கட்சிக்காரர்கள் பிழைக்கவே வேண்டாமா' என்று கேட்கலாம் உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம். காங்கிரஸ்காரர்கள் ஏலம் எடுக்கப் போவதில்லை, என்று அவர்களே அறிவித்து விட்டார்கள். அ. தி. மு. க. வினரும் ஏலம் எடுக்கப்போவது இல்லை என்று அவர்களே அறிவித்து