பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

காவல்துறை பற்றி

விட்டார்கள். எனவே, (குறுக்கீடு), மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டும் கிடையாதா? உண்மையா அது? திருமதி பாப்பா உமாநாத் அவர்கள் திரு. ரமணி சார்பிலே சொல்லுகிறார்களோ என்னவோ தெரியாது, அவர்களும் எடுக்கப் போவது இல்லை என்று. (குறுக்கீடு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் எடுக்கப்

போகிறீர்களா?

திரு. ஒய். வெங்கடேஸ்வர தீட்சிதர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஜனதா தளத்துக்காரர்களும் ஏலம் எடுக்கப் போவது இல்லை. அதைச் சொல்ல தவறிவிட்டார். ஜனதா தளத்துக்காரர்களும் ஏலம் எடுக்கப் போவது இல்லை. (சிரிப்பு) (குறுக்கீடு). உங்களோடு சேர்ந்த ஜனதா தளத்துக்காரர் களும் ஏலம் எடுப்பதில் சம்மதம் இல்லை. ஏலம் எடுக்கவும் போவது இல்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : வேறு மாநிலங் களில் எடுப்பதாகக் கேள்வி. (சிரிப்பு).

திரு. ஒய். வெங்கடேஸ்வர தீட்சிதர் : வேறு மாநிலத்தில் எடுக்கிறார்கள். நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். (சிரிப்பு).

ல்

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதனால் இது ஏலம் எடுக்கிற வாய்ப்பு கட்சிக்காரர்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் எல்லாம் தங்களுடைய கொள்கையில் நிச்சயம் உறுதியாக இருப்பார்கள். நிச்சயமாக ஏலம் எடுக்க மாட்டார்கள். பினாமி வைத்து எடுத்தால்கூட நிச்சயமாக கண்டுபிடித்து இந்த அவையில் வெளியிடுவேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு (சிரிப்பு) இந்த அளவிலே என்னுடைய உரையை முடிக்கிறேன்.