பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

417

உரை : 16

நாள் : 26.08.1996

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவையினுடைய துணைத் தலைவர் அவர்களே, காவல்துறை மானியத்தில் அவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 19 பேர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்து, அவற்றுக்குப் பதிலும், விளக்கங்களும் அளிக்கின்ற வகையில் நான் இங்கே நின்றுகொண்டிருக்கின்றேன்.

காவல் துறை எத்தனைக் கடமையுணர்வோடு பணியாற்ற வேண்டும் என்பதையும், அந்தப் பணி எவ்வாறு இடைக் காலத்திலே பங்கமுற்றுவிட்டது என்பது குறித்தும் மாண்புமிகு உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மிக விளக்கமாக இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

தமிழக காவல் துறையைப் பொறுத்தவரையில், கடமைகளை நிறைவேற்றுவதிலும், சாதனைகளைப் படைப்பதிலும், இந்திய அளவில் மாத்திரமல்ல உலகளவில் உயர்ந்து நின்ற ஒன்றாகும். ஆனால் இடையில் ஒரு ஐந்து ஆண்டு காலத்தில் காவல் துறை பெரும் களங்கத்திற்கு உள்ளான ஒரு துறையாக மாறிவிட்டது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்த அவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள், ஏன் அ.இ.அ.தி.மு.க. வினுடைய கட்சித் தலைவர் திருநாவுக்கரசுகூட அதை ஓரளவு ஏற்றுக்கொண்டு, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், காவல் துறை திருத்தப்படுவதற்கு உரிய வழிகள் அனைத்தையும் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். சொல்லப்பட்ட குற்றங் குறைகள் அனைத்திற்கும், யோசனைகள் எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க நேரம் இல்லாதது மட்டுமல்ல, சிலவற்றைக் குறித்து நானே அவசரப்பட்டு இங்கே அறிவுப்புக்களைத் தந்து, அதனால் வேற பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு, அந்தக் கருத்துக்கள் எல்லாம் ஆய்வுக்கு