பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

காவல்துறை பற்றி

உரியவைகள், ஏறத்தாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவைகள் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு ஆய்வு செய்யப்படும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை முதலிலேயே நான் இங்கே வழங்க கடமைப் பட்டிருக்கிறேன்.

மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள இந்தக் காவல்துறை, ஒரு ஐந்தாண்டுக் காலமாக பொதுமக்களைப் பற்றி பெருமளவிற்குக் கவலைப்படாமல் தனிப்பட்ட ஒருவருடைய பாதுகாப்பு, அவர்களுடைய நலன்கள், அவர்களுடைய சுகதுக்கங்கள் இவைகளில் மட்டும் தங்களுடைய கடமைகளைச் செய்து வந்தது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. அதன் காரணமாகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற 1989ஆம் ஆண்டையும், கடந்தகால ஆட்சியில் 1995ஆம் ஆண்டில் காவல்துறையில் நடத்திய சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை மிகத் தெளிவாக விளங்கும். 1989ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்கள், அவைகள் கண்டுபிடிக்கப்பட்ட விகிதாச்சாரம், எண்ணிக்கை இவைகளையெல்லாம் பார்த்தால், இந்த உண்மை தெளிவாகப் புலப்படும்.

1989-ல் கொலைகள்

அவற்றில் கண்டுபிடிக்கப்பட்டவை

கண்டுபிடிக்கப்பட்டவை சதவிகிதம்

1995-ல் நடைபெற்ற கொலைகள்

1,493

1,182

79.16

1,959

1,107

கண்டுபிடிக்கப்பட்டவை

அதாவது 56,51 சதவிகிதம்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

1989ல் கொலை முயற்சிகள்

கண்டுபிடிக்கப்பட்டவை

அதாவது 79.08 சதவிகிதம். 1995-ல் கொலை முயற்சிகள் கண்டுபிடிக்கப்ட்டது

சதவிகிதம் 49.41

1,047

828

1,599

790