பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

41

கூறுவதற்கு காரணம், 10 லாரிகளில் கள்ளத்தனமாக சரக்குகள் கொண்டு போகப்பட்டால், அவைகளை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு லாரியின்மீது வழக்குப் போடுவதும், இதை மட்டும் வைத்துக்கொண்டு, அந்தப் பகுதியிலுள்ள போலீஸ் இலாகாவினர் திறமையாக பணியாற்று கின்றனர் என்று சொல்லக் கூடிய நிலைமையும் ஏற்படுகிறது. போலீஸ் இலாகாவினர் அடிக்கடி கள்ளக் கடத்தலில் உடந்தையாக ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமையைச் சீர்படுத்துகின்ற வகையில் போலீஸ் இலாகாவில் இருக்கின்ற திறமையான ஒற்றர்கள் மூலமாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கருப்புப்பணம் பற்றி, அண்மைக் காலமாக, அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. கருப்புப்பணத்தைப்பற்றி முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், நமது சட்டமன்ற உறுப்பினருமான திரு. காமராஜ் அவர்கள் ஒரு யோசனையை வழங்கியிருக்கிறார்கள். தஞ்சை பொதுக்கூட்டம் என்று கருதுகிறேன் - கருப்புப் பணம் யார் யார் வீட்டிலே இருக்கிறதோ, அங்கெல்லாம் தொண்டர்கள் வேலைக்காரர்களாகச் சேர்ந்து கருப்புப் பணம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள், நாங்கள் அவர்களை சட்டப்படி வழக்கு மன்றத்தில் நிறுத்துகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். வேடிக்கையாக அந்த காலத்தில் கூறுவார்கள், போலீஸ்காரர்களை கிண்டல் செய்யக்கூடிய முறையில் “திருடனை பிடித்துக் கொடு நாங்கள் கையில் விலங்கு மாட்டுகிறோம்” என்று. நமது மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்து, இன்றைய தினம் காங்கிரஸ் அக்கிராசனராக இருக்கிற திரு. காமாராஜர் வெளியிட்டிருக்கிற திட்டம் ஆபத்தானது என்று கருதுகிறேன். ஏனென்றால் போலீஸ் இலாகாவிலே துப்பறியும் நிபுணர்கள் இருக்கிறார்கள். போலீஸ் இலாகாவிலே திறமையான ஸி.ஐ.டி.-க்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் திறமை இல்லை என்று திரு காமராஜர் ஏற்றுக்கொண்டாரா? அதைத்தான் சுட்டிக் காட்டுகிறாரா? கருப்புப்பணம் இருக்கிற முதலாளிகளிடத்தில் வேலை ஆட்களாகச் சேர்ந்து பணியாற்றுங்கள் என்று சொல்லும்போது, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, கருப்புப் பணம் வைத்திருக்கிறவர்கள் கொஞ்சம் பத்திரமாக இருங்கள்,

ம்