428
காவல்துறை பற்றி
எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தன்னாலேயே ஞாபகம் வருகிறதா அல்லது மாடத்தைப் பார்த்தவுடன் ஞாபகம் வருகிறதா? தன்னாலேயே ஞாபகம் வருகிறதா அல்லது மேல் மாடத்தைப் பார்த்தவுடன் ஞாபகம் வருகிறதா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ஞாபகம் மாடத்தில் இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி). சில பேருக்கு மாடமே இருப்பதில்லை. (மேசையைத் தட்டும் ஒலி). இந்த போலீஸ் கமிஷன் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியதைப் போல திரு. கோபால்சாமி என்று அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவருடைய தலைமையில் 1969ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அதைப் பற்றி நான் சொல்வதைவிட, எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதைவிட, ஒரு 'போலீஸ்காரருடைய டயரி' என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தில் முன்னாள் ஐ.ஜி.யாக இருந்த திரு. அருள் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். "போலீஸ் கமிஷன் அமைத்து தமிழக போலீஸ் துறை எவ்வாறு பணிபுரிகிறது என்று கண்டறிந்து அறிக்கை அளிக்க வழி கண்டவர் திரு. மு. கருணாநிதி. 133 பரிந்துரைகளைச் செய்தது அந்த கமிஷன். அதில் 115 பரிந்துரைகளை உடனே ஏற்று அதை நிறைவேற்ற 4 கோடியே 60 இலட்சம் ரூபாயையும் ஒதுக்கியவர் கருணாநிதி. அதனால்தான் இந்தியாவிலேயே தமிழக போலீஸ் துறையை நவீன முறையில் மாற்றியமைக்க முடிந்தது” - இவ்வாறு திரு. அருள் குறிப்பிட் டிருக்கிறார். அந்தச் செய்தியைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். என்னை அவர் பாராட்டவில்லை. ஏனென்றால் அந்தப் புத்தகம் வெளி வந்த ஆண்டு 1978ஆம் ஆண்டு. எனவே என்னை அவர் பாராட்டவில்லை. பாராட்டாமல் செய்தியை மாத்திரம் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அது மாத்திரம் அல்ல. அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது போலீஸ் கமிஷன் அதைப் போல ஒன்று அமைக்கப்பட்டதா என்றால் இல்லை. பிறகு மீண்டும் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல 89ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் சபாநாயகம் அவர்களுடைய தலைமையிலேயே ஒரு போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷனுடைய அறிக்கை, பரிந்துரைகள் வெளிவருவதற்கு