பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

காவல்துறை பற்றி

வேலைக்காரர்கள் போல யாராவது வந்தால் நம்பாதீர்கள் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுகிறாரா என்று எனக்குப் புரியவில்லை.

ரு

நான் கடைசியாகக் குறிப்பிடுகிற நேரத்தில் நண்பர் அன்பில் தர்மலிங்கம் அவர்களும் அரங்கண்ணல் அவர்களும் எடுத்துத் தொவித்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் வேறு எதிர் கட்சிக் கூட்டங்களுக்கு சுருக்கெழுத்தாளர்கள் அனுப்பப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி கூட்டங்களுக்கு சுருக்கெழுத்தாளர்கள் வருவதில்லை. இதை அமைச்சரே ஒத்துக் கொண்டிருக்கிறார், வழக்கு மன்றங்களிலும் இது ஒத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. நான் இரு தரப்புக் கூட்டங்களுக்கும் சுருக்கெழுத்தாளர்கள் வருவது நல்லது என்று கருதுகிறேன். ஆளும் கட்சியின் நன்மைக்காகக்கூட அது நல்லது என்று தெரிவித்துக்கொள்கிறேன். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு மற்ற கட்சிக்காரர்களைத் தாக்கி மட்டமாக பேசுகிறார்கள் என்பதை அறிவதற்கு அவர்கள் இருந்தால் நல்லது என்பது ஒரு காரணம். அப்படி எங்கள் கட்சியில் உள்ளவர்கள் பேசினால் அவைகளை எடுத்துக் கூறவும், ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பேசினால் அவைகளை எடுத்துக் கூறவும், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்களும் இணைந்த முறையில் ஒரு

குழுவை அமைத்தாவது தவறுகளைக் கண்டித்து நாகரீக அரசியலை வளர்ப்பதிலே எங்கள் கழகம் இந்த அமைச்சர் அவையில் இருக்கும் நல்லவர்களோடு ஒத்துழைக்க என்றும் தயாராக இருக்கும் என்று கூறி அந்த வகையில் முயற்சி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் ஆளும் கட்சிக்கே அது தீமையாக முடியலாம். சுருக்கெழுத்தாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்திற்கு வந்து அண்ணாவினுடைய பேச்சை, நாவலருடைய பேச்சை, எங்கள் பேச்சை எழுதி எழுதிப் பழக்கப்படுகிற காரணத்தினால், எங்களுடைய பேச்சுக்களை கேட்பது மாத்திரமல்ல, எழுதி எழுதி, எழுதியதைத் திரும்பப் படித்து, படித்ததை இன்னொரு தாளில் எழுதி, எழுதியதை நகல் எடுத்து, அவர்களையும் கொஞ்ச நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினராக நீங்களே செய்கிறீர்கள் என்று அமைச்சர்