436
காவல்துறை பற்றி
ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது பிரதமருக்கு எஸ்.பி.ஜி. என்று இருப்பதுபோல், தனக்கும் ஒரு குரூப் இருக்க வேண்டுமென்று, எஸ்.எஸ்.ஜி - Special Security Group - என்ற ஒரு தனி அமைப்பை உருவாக்கினார். உருவாக்கியது மாத்திரமல்ல, ஏதோ, ஏனோ, தானோ என்று ஓரல் உத்தரவு அல்ல, ஓரல் ஆர்டர் அல்ல, இந்தச் சட்டமன்றத்திலேயே தனியாக, அதற்காக ஒரு சட்டமே கொண்டுவந்தார்கள். 'இசட்' பிரிவிலே இருக்கிற முதலமைச்சருக்கு அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு பட்டியல் ஒன்று இருந்தபோதும்கூட, அதைப் புறந்தள்ளிவிட்டு, ஒரு சட்டத்தையே இந்த அவையிலே 1993ஆம் ஆண்டு கொண்டு வந்து ஆ நிறைவேற்றினார்கள்; நிறைவேற்றி, இந்த எஸ்.எஸ்.ஜி பிரிவு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பில் ஐ.ஜி.ஆஃப் போலீஸ் ஒருவர், 2 எஸ்.பி.க்கள், ஒரு அடிஷனல் எஸ்.பி., 3 டி.எஸ்.பி.க்கள், ஒரு டெக்னிக்கல் டி.எஸ்.பி., 31 இன்ஸ்பெக்டர்கள், 5 டெக்னிக்கல் இன்ஸ்பெக்டர்கள், 106 சப்-இன்ஸ்பெக்டர்கள், 13 டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர்கள், 104 தலைமைக் காவலர்கள், 30 நாயக்குகள், 301 காவலர்கள், 2 டெக்னிக்கல் அதிகாரிகள் மொத்தம் 606 காவல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இந்தப் பிரிவிலே மாத்திரம் இடம் பெற்றிருந்தார்கள். இந்தத் தனிப்பிரிவின் உபயோகத்திற்காக ஒரு டாட்டா சியரா எங்கள் அமைச்சர்களுக்கு ஓட்டைக் கார்தான் கிடைக்கிறது இப்போது இந்தத் தனிப்பிரிவின் உபயோகத்திற்கு ஒரு டாட்டா சியரா, ஒரு டாட்டா எஸ்டேட் உட்பட 70 வாகனங்கள் இருந்தன. இந்தத் தனிப்பிரிவுக்கான செலவு மாத்திரம், கடந்த ஆட்சியில், 21,23,80,000 ரூபாயாகும். தனி நபர் ஒருவரை பாதுகாப்பதற்காக, மக்களின் வரிப்பணம் ஏறத்தாழ 22 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்தத் தனி அமைப்பு உடனடியாகத் கலைக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்காகச் சட்ட முன்வடிவு ஏனென்றால் சட்டம் போட்டு வந்தது - முள்ளை முள்ளாலேதான் எடுக்க வேண்டும்; வைரத்தை வைரத்தால் அறக்க வேண்டும்; முள் என்று சொன்னால் கோபம் வரும் அவர்களுக்கு. அதனால் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். எனவே அதற்கான சட்ட முன்வடிவு - இந்தக் கூட்டத் தொடரிலேயே வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
—
-