பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

காவல்துறை பற்றி

இருந்தபோது, காவல் துறையிலே மதுவிலக்குக்கென இருந்த தனிப்பிரிவு அறவே கலைக்கப்பட்டது. பிறகு வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் மது விலக்குத் தனிப் பிரிவு

கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக லஞ்ச லாவண்யம், மாமூல், இவைகள் எல்லாம் பெருகியதை உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவீர்கள். 1989ஆம் ஆண்டு கழக அரசு அமைத்த போலீஸ் கமிஷன், சபாநாயகம் தலைமையிலே அமைந்த அந்த கமிஷன் தெளிவாக சொல்லி இருக்கிறது. "Disbanding of Prohibi- tion Police and entrusting their work to local police; local police sta- tions should pursue disposal of lakhs of cases of P.E.W. (Prohibition Enforcement Wing)" என்று சபாநாயகம் கமிஷன் தெளிவாக கூறி இருக்கிறது. அதை கடந்த கால அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த அரசு ஏற்றுக்கொண்டு மது விலக்குப் பிரிவை உடனடியாகக் கலைத்து (மேசையைத் தட்டும் ஒலி) உத்தரவிடுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுமாத்திரமல்ல, போலீஸ் கமிஷனுடைய மற்றொரு

பரிந்துரை,

"Forest Cell C.I.D. to be abolished; investigation of forest offences to be done by local police stations having jurisdiction; to set up mobile patrols and Special Forest Police Stations in the vicinity of forest to detect sandalwood thefts". என்பது ஆகும். புலனாய்வுத் துறையிலே உள்ள தனி அமைப்பான பாரெஸ்ட் செல்லையும் கலைத்துவிட்டு, அந்தப் பொறுப்பையும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் (மேசையைத் தட்டும் ஒலி). சந்தனக் கட்டை திருட்டை பிடிக்க தனி போலீஸ் நிலையங்கள் காட்டுப் பகுதியிலே அமைக்க வேண்டும் என்ற 1989ஆம் ஆண்டு போலீஸ் கமிஷன் அறிக்கையை கடந்த கால அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்த அரசு ஏற்றுக்கொண்டு வனத்துறை போலீஸ் சி.ஐ.டி. பிரிவும் கலைக்கப்படுகிறது என்று குறிப்பிடுகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). அப்படியானால் வீரப்பன்? என்று கேட்பார்கள். அதற்கு என்று தனி டாஸ்க் ஃபோர்ஸ் இருக்கிறது. அது கவனித்துக் கொள்ளும்.

சில அறிவுப்புகளை மாண்புமிகு உறுப்பினர்கள் பலருடைய கோரிக்கைகளின் அடிப்படையில் இங்கே வைக்க