கலைஞரின் சட்டமன்ற உரைகள்
447
ஆயிரம் பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). அந்தத் தேர்வில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட உளவியல் தேர்வு முறையும் சேர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். (குறுக்கீடு).
மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : மாண்புமிகு முதல்வர் அவர்கள் பதில் சொல்லி முடித்த பிறகு கேட்கலாம். (குறுக்கீடு).
திரு. எஸ். திருநாவுக்கரசு : குறுக்கிடுவதற்கு வருந்துகிறேன். பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 1993-லே இதேபோல் தேர்வு செய்யப்பட்ட 376 பேர்கள் விடப்பட்டு இருக்கிறார்கள். காவலர்கள் என்று எல்லா உறுப்பினர்களும் இங்கே பேசினார்கள். அரசு உத்தரவாதம் கொடுத்து தேர்வு எல்லாம் முடிந்து 376 பேர்கள் இன்னும் பணியிலே அமர்த்தப் படாமல் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து, முதலமைச்சர் அவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1993-லே இண்டர்வியூ எல்லாம் முடிந்து, செலக்சன் எல்லாம் முடிந்தவர்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அந்தக் கருத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நடப்பு நிதியாண்டில், கீழ்கண்ட இடங்களில் இயங்கிவரும் புறக்காவல் நிலையங்களுக்குப் பதிலாக, புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். அண்ணா மாவட்டம், சேலையூர், (கைத்தட்டல்) ஒருவர்தான் கைத்தட்ட முடியும், ஏன் என்றால், ஒருவர்தான் கேட்டிருப்பார். திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம், அரியமங்கலம்; புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம்; காமராசர் மாவட்டம் சேத்தூர்; இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம்; வீரன் அழகுமுத்து வைகை மாவட்டம், கோம்பை; வீரன் அழகுமுத்து வைகை மாவட்டம், வரிசைநாடு; நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் சிவந்திபட்டி; சிதம்பரனார் மாவட்டம் சூரங்குடி; கன்னியாகுமரி மாவட்டம் கடையால்மூடு; எம்.ஜி.ஆர்.