காவல்துறை பற்றி
450
உரை : 17
நாள் : 25.04.1997
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவல் துறை, அதன் தொடர்பான தீயணைப்புத் துறை, ஆயத்தீர்வைத் துறை ஆகிய துறைகள் குறித்து நேற்றும் இன்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட உரையாற்றியபிறகு, என்னுடைய விளக்கங்களைத் தருகின்ற நிலையில் இந்த அவையில் நான் நின்றுகொண்டிருக்கின்றேன்.
காவல் துறை என்பது எந்த அளவிற்கு அரசியல் கட்சிகளால் அது ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சி களாக இருந்தாலும், விமர்சிக்கப்படுகின்ற ஒரு துறை என்பதை நாம் அனைவரும் மிகத் தெளிவாக அறிவோம்; காவல் துறை இப்படி யெல்லாம் தீங்கிழைக்கின்றது. கடமையை உணராமல் நடை போடுகின்றது என்றெல்லாம் விமர்சிக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள்கூட, காவல் துறையினருடைய குடும்ப நலன்களில் அரசு அக்கறை காட்ட வேண்டுமென்பதையும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டு மென்பதையும் இணைத்துச் சொல்லும்போது, எனக்குத் தோன்றுகின்ற கருத்தெல்லாம், பெற்றோர் தங்களுடைய குழந்தையை அடித்துவிட்டு, ஏசிவிட்டு, செய்த குற்றத்தைக் கடிந்து இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று வசைமாரிப் பொழிந்து விட்டு, இருந்தாலும் வந்து தொலை, சாப்பிட்டுட்டுப் போ என்று சொல்வதைப் போல, கட்சிகளில் உள்ள உறுப்பினர்கள், காவல் துறையைப் பற்றிக் கடுமையாக விமர்சித்தாலும், அவர்களுடைய நலன்களுக்காக, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதை, தாங்களும் நெஞ்சிலே பதியவைத்துக்