பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

காவல்துறை பற்றி

கமிஷன் அமைக்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான். இந்த இரண்டு போலீஸ் கமிஷன்கள் செய்த சிபாரிசுகளை எல்லாம் படிப்படியாக நாம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் காவல் துறை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆளுங்கட்சிக்காரர்களே குண்டர்களாக மாறிய வரலாறு எல்லாம் நம்முடைய தமிழ் மாநிலத்தில் உண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதற்கு உதாரணமாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்திலே பல மணி நேரம் சிறை வைக்கப்பட்ட நிகழ்ச்சியும், அவர் சிறை மீட்கப்பட்டு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலிலே தங்க வைக்கப்பட்டபோது, அந்த ஓட்டலே அடித்து நொறுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியும் போதுமானவை என்றே கருதுகிறேன்.

வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், விஜயன், அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணை வேந்தர் டாக்டர் அனந்த கிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் குண்டர்களால் தாக்கப்பட்டதையும் இந்த அவை மிக நன்றாக அறியும்.

நாகர்கோவிலில் சிறைச்சாலைக்குள்ளேயே புகுந்து சிறையிலே அடைக்கப்பட்டிருந்த ரவுடி லிங்கன் என்பவரை மற்றொரு ரவுடியான பிரபு கூட்டத்தினர் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற நிகழ்ச்சியும் கடந்த கால ஆட்சியிலே நடைபெற்றதுதான்.

இன்றைய கழக ஆட்சியிலே அத்தகைய குண்டாயிசம், ரவுடியிசம் தொடரக்கூடாது என்பதற்காக திடமாக முடிவுகள் எடுக்கப்பட்டு காவல்துறையும் அந்தக் கடமையை ஆற்றுகின்ற அந்தக் கம்பீரத்தோடு அவர்கள் செயலாற்றி, ஆசைத்தம்பி, மனோ, கபிலன் போன் பெரிய ரவுடிகளினுடைய அட்டகாசத்தை அடக்கியதையும் இந்த அவை அறியும். அத்தகைய அடக்குகின்ற முயற்சியிலே அந்த ரவுடித் தலைவர்கள் கொல்லப்பட்டதையும் இந்த அவை மிக நன்றாக அறியும். இவர்களைத் தவிர, பல ஆண்டுக் காலமாக இத்தகைய ரவுடித்தனங்களில் ஈடுபட்டிருந்த 1137 நபர்கள் மீது கழக ஆட்சியிலே கடந்த 10 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 729 பேர்கள் குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலிலே வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.