பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

455

எதிர்க்கட்சி தலைவர் அவர்களும் மற்றும் இங்கே பேசிய பல்வேறு கட்சிகளினுடைய தலைவர்களும், உறுப்பினர்களும் காவல் நிலையங்களிலே நடைபெறுகின்ற சாவுகளைப் பற்றி மிகுந்த உருக்கத்தோடு குறிப்பிட்டு இருக்கின்றார்கள். நானும் எதிர்க்கட்சியிலே இருந்தபோதும் சரி, இடையிடையே ஆளும் கட்சியிலே அமருகின்ற வாய்ப்பு வந்தபோதும் சரி, இந்தச் சாவுகளை என்றைக்கும் அனுமதிப்பவன் அல்ல. அதற்குரிய காரணங்களை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. எப்படி இறந்தார்கள் என்று - மாரடைப்பால் இறந்தார், தூக்குமாட்டிக் கொண்டு இறந்தார், கடுமையான ஜூரத்தால் இறந்தார், வலிப்பால் இறந்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிற காரணங்களை நான் என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை. இன்றைக்கும் ஏற்றுக் கொள்பவன் அல்ல என்பதை இந்த அவையிலே நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இத்தகைய சாவுகள் தொடரக்கூடாது என்பதற்காக எடுத்த நடவடிக்கைகளை இந்த அவையிலே உள்ள நீங்கள் யாரும் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், மதுரை மாவட்டம் எழுமலை காவல் நிலையத்தில் பெருமாள்தேவர் என்பவர் 23-6-96 அன்று இந்த ஆட்சி வந்த பிறகு - இறந்துவிட்டதைத் தொடர்ந்து இராஜசேகரன் என்ற உதவி ஆய்வாளர், காந்தீபன் என்கின்ற தலைமைக் காவலர், ஆண்டவர் என்கின்ற முதல்நிலைக் காவலர், அரிச்சந்திரன் என்கிற இன்னொரு முதல்நிலைக் காவலர், கோபால் என்ற காவலர் கைது செய்யப்பட்டார்கள் என்ற நிகழ்ச்சியும் இந்த ஆட்சியிலேதான் நடந்தது. அதைத்தான் நேற்றைக்கு சுப்பராயன் அவர்கள் பேசும்போது, இதை நான் வரவேற்கிறேன், இப்படி தமிழ்நாட்டில் முதன்முதலாக காவல் நிலையத்திலே இறந்துபோன கைதிக்காக அவர்களை மன்னிக்காமல் காவல்துறை மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது 302 செக்சன் வரையிலே போட்டவர்களைக் கைது செய்த பெருமை இந்த அரசுக்கு உண்டு என்று அவர்கள் சொன்னார்கள்.

மேலும், மதுரை மாநகரத்தில் வேலுச்சாமி என்பவர் ஒரு காவல்நிலையத்திலே, திடீர் நகர் காவல் நிலையத்திலே 29-6-96 அன்று இறந்த செய்தியைத் தொடர்ந்து ஆய்வாளர் தங்கராஜ், தலைமைக் காவலர் செல்வராஜ், முதல்நிலைக் காவலர் பழனிமுத்து,