கலைஞரின் சட்டமன்ற உரைகள்
457
ஜாதிக் கலவரத்தால் செத்திருக்கிறார்கள். ஆனால் மதக் கலவரத்தில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நான் ஒப்பிட்டுக் காட்ட விரும்பவில்லை. 4 பேர் என்றாலும் ஒருவர் என்றாலும்கூட கலவரம் கலவரம்தான். மத உணர்வு, மத வெறி, ஜாதி வெறி இவைகளின் காரணமாக ஏற்படுகின்ற பூசல் பூசல்தான். அது தவிர்க்கப்பட வேண்டுமென்கின்ற எண்ணம் எல்லோருடைய ஒருமித்த எண்ணம்தான். அதனால்தான் வழக்கமாக இருக்கின்ற காவல்துறையினுடைய படை போதாது என்பதற்காக
அதிவிரைவுப் படை ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். மதக் கலவரங்கள், ஜாதிக் கலவரங்கள் குறித்த விவரங்களை முன்கூட்டியே சேகரித்து, தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக Swift Action Force என்ற ஒரு படையை அதிவிரைவுப் படையை இந்த அரசு அமைத்து, 275 காவலர்களின் முதல் அணிவகுப்பை 28-3-1997 அன்று ஆவடியிலே தொடக்கி வைத்திருக்கின்றோம். இந்த அதிவிரைவுப் படை ஆவடியிலே மாத்திரமல்லாமல், அடுத்து கோவை, சென்னை, மதுரை, நெல்லை என்று படிப்படியாக பல்வேறு மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்றும், அவர்கள் ஜாதிக் கலவரங்களோ, மதக் கலவரங்களோ ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்கு பயன்படுத்தப்படுவார்கள் அல்லது தடுத்தும் முடியாமல் கிளர்ந்து எழுந்துவிட்டால், அவைகளை அடக்குவதற்கு இந்தப் படையினர் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று பயன்படுத்தப்படுவார்கள் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த ஆட்சிக் காலத்தில் காணாமற்போன நகைகள், காணாமற்போன பல்வேறு உடைமைகள் இவைகள் எல்லாம் எப்படி மீட்டுத் தரப்பட்டன என்பதையும் அவ்வப்போது அதை இந்த அவையிலே மாண்புமிகு எல்லா கட்சித் தலைவர்களும் பாராட்டிப் பேசியதையும் நான் மறந்துவிடவில்லை. இன்றைக்கு பாராட்டால் இருந்தாலும்கூட, நான் எப்போதும் பாராட்டாமல் இருக்கிற நேரத்திலே, அதைப் பொருட்படுத்தாமல் பாராட்டியவை களைத்தான் மனதிலே எண்ணி, பாராட்டவில்லை என்று வருத்தப்படாமல், பாராட்டியதை எண்ணி பாராட்டியதை எண்ணி எண்ணி அந்த பசுமையான நினைவுகளிலேயே நான் பொது வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பவன். அந்த வகையிலே உங்களுக்குத்