பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

காவல்துறை பற்றி

தெரியும், கழகத்திற்கு என்று கோயில் குளங்களைப் பற்றி தனிப்பட்ட ஒரு கோட்பாடு உண்டு. ஆனால் கழக ஆட்சியைப் பொறுத்தவரையில், கோயில் குளங்களிலே நம்பிக்கையுள்ள யாருடைய மனமும் புண்படாமல் நடந்துகொள்கின்ற போக்கு கழக ஆட்சிக்கு உரிய போக்காகும். அதனால்தான் கோயில் கூடாது என்பது அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என்று நான் இன்றைக்கு அல்ல, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி யிருக்கிறேன் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கோயில்களிலே, குறிப்பாக மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் கோவிலில் களவுபோன ரூ. 8.37 லட்சம் மதிப்புடைய நகைகள் உடனடியாக மீட்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் கோயிலிலே உள்ள அர்ச்சகர்கள் எல்லாம் கூட வந்து, என்னைச் சந்தித்து, எனக்குச் சால்வையும், மாலையும் அணிவித்து, என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள்.

ஆண்டவனால்கூட கண்டுபிடிக்க முடியாத திருட்டை ஆளுகின்றவர்கள் கண்டுபிடித்து விட்டார்களே என்று எங்களுக்கு வாழ்த்துக்கூறி விட்டுச் சென்றார்கள். (மேசையைத் தட்டும் ஒலி). மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோயில், கும்பகோணம் சாரங்க பாணிகோயில், மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில் ஆகிய புகழ் பெற்ற ஆலயங்களில் முந்தைய ஆட்சியில் 1992 முதல் களவு போன 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளும், நகைகளும், கழக அரசால்தான் கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன என்பதை ஆத்திக நண்பர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). 29-6-1996 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில், ஜி.சி.எஸ். வங்கியில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் களவடைந்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிட மிருந்து 5914 லட்சம் மதிப்புடைய நகைகள் மீட்கப்பட்டன என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நிதி நிறவனங்களைப் பற்றி இங்கே பேசினார்கள். தமிழ்நாட்டில் கடந்த 5,6 ஆண்டு