பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

463

வரவேற்றீர்கள். நான் மறந்துவிடவில்லை. ஆனால் அதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கலைக்கப்பட்டு விட்டாலும்கூட மாநில அளவிலே அந்தப் பணியைச் செய்ய காவல் துறையிலே அவர்களாகவே ஆங்காங்குள்ள காவல்துறையினுடைய அதிகாரிகள், பணியாளர்கள் அந்தப் பணியிலே ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

அதிலே, குறிப்பாக இந்தக் கள்ளச் சாராயத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமேயானால் நம்முடைய ஈஸ்வரன்கூட இந்தக் கள்ளச் சாராயம் இருக்கிற காரணத்தினால்தான் இவ்வளவு தொல்லை, எனவே சாராய கடைகளையே திறந்துவிடுங்கள் என்று ஆதங்கத்தோடு சொன்னதாக அவர்களுடைய கட்சியின் சார்பிலே தலைவர் அவர்களும், துணைத் தலைவர் அவர்களும் இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு என்ன பயம் என்றால் சாராயக் கடைகளைத் திறங்கள் என்று சாதாரண மனிதர் அல்ல ஈஸ்வரனே சொன்ன பிறகு (சிரிப்பு) அதை எப்படி மீறுவது என்பதுதான் என்னுடைய பயம். இருந்தாலும் ஆண்டவன் சொன்னாலும் அது அநியாயமாக இருக்குமேயானால் அதை மறுக்கின்றவர்கள்தான் சுயமரியாதைக் காரர்கள் என்ற அதே அடிப்படையில், நானும் தமிழ் மாநில காங்கிரஸினுடைய அந்த உணர்வோடு ஒன்றிப்போகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). நிச்சயமாக சாராயக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

ஆனால், சாராய அழிப்புப் பணியில் நாம் இந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு என்ற ஒரு பிரிவு கலைக்கப்பட்ட பிறகுகூட சாராயத்தை அழிப்பதில் ஒரு புள்ளிவிவரத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இதிலே நான் ஒப்பீடு காட்ட விரும்பவில்லை. முன்பு எப்படி, இப்போது எப்படி என்றெல்லாம் ஒப்பீடு காட்ட விரும்பவில்லை. முன்பும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கின்ற முயற்சிகள் நடைபெற்றன

ஆனால்,

இன்றைக்கு அதைவிட மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் தீர வேண்டும். சாராயத்தை அழிப்பதில், கலால் வேட்டைகள் நடைபெற்று, கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, 13-5-96 முதல்